Tuesday, March 2, 2021

தூது...முகநூல் தொடர்...(9)..

 9 வது தூது- 1985 நவம்பர்)

➖➖➖➖➖➖➖➖➖


    ‘’இலக்கியப் பாதையில் மூன்றாம் வருட மைல்கல்’’ என்ற கொட்டெழுத்துக்களுடன் வெளியான இவ்விதழில ஆசிரியர் தலையங்கம்  வெண்பா வடிவில் உள்ளது..


    இவ்விதழில், ஏ.எம்.எம். நஸீர்-  சாரணா கையும்- யாழ் ஜெஸீலா முகமட்- நஸீலா மீராமுகைடீன்- எம்.ஐ.எம். சுபைர்- எஸ்.எம்.எம். ராபீக்,- தீரன்- நஸீரா சாத்- எச்.ஏ. அஸீஸ்  உட்பட மேலும் பலர் எழுதியுள்ளனர். 


குறிப்பாக எச்.ஏ அஸீஸின்  ‘போதி மரத்தின் கீழிருந்து..’. என்ற கவிதையை இக்காலத்துக்கும் பொருத்திப் பார்க்க கூடியதாகவுள்ளது ஓர் ஆச்சரியமே..  அதிலிருந்து சில வரிகள்--  


----- பள்ளிவாயிலா யாருக்கு..? 

நாளைய பெரஹர...—

அங்கேதான் தொடங்குமாம் 

எல்லாம் இழந்து – 

எல்லாம் இழந்து 

அரச மரத்தின் 

விதைகளைத் தூவும் காக்கைகளுக்கு  

அழைப்பு விடுங்கள்- 

உங்கள் தலையின் மீதும் 

ஒன்றைத் தூவக் கூடும்- 

சந்தோஷம்தானே...- 

கசாப்புக் கடைகளைத் 

திறந்தே வைத்திருங்கள்.. // 


மற்றும்,  தூது கவியேட்டின் மூன்றாண்டுப் பூர்த்தியையும், கல்முனை புகவம் அமைப்பின் ஐந்தாண்டு நிறைவையும் ஒட்டி நடத்தப்படும்  கவிதைப்போட்டி விளம்பரத்தில் 1 ஆம் பரிசு 1௦௦/-, 2 ஆம் பரிசு 5௦/-, 3ஆம் பரிசு 25/-, வீதம் இரு கவிதைகளுக்கு வழங்கப்படும் என்றும்  இத்தொகையை கல்முனை ஷியாமா ரைஸ் மில் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .. 

மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தூதின் விலை 2/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது... 


மடல்விடுதூது பகுதியில், 1985.10.05 ஆம் திகதி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் இலக்கிய மஞ்சரி பகுதியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி இங்கு பிரசுரமாகியுள்ளது.....’’.....பரிமாற்றம் என்ற ஆசிரியர் கருத்து குறும்பாவில் அமைந்துள்ளது.  சீண்டப்படாது கிடந்த இதன் அமைப்பைப் புரிந்து கொண்டு ஆக்கம் செய்து உயிர்ப்பித்ததை பாராட்டலாம்.ஷுக்னா லாபீரின் 83 ஜூ(வா)லை உய்ரித்துடிப்பு மிக்கது.. எச்.ஏ. அசீஸினதும், நவாஸ் ஏ ஹமீதினதும்  கவிதைகள் கோடிட்டுக் காட்டக் கூடியன..  கையளவு உள்ள தூது  கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய பகுதி மடல் விடு தூது ஆகும்.. எமது பார்வையில் கூட்டு மொத்தமாக தூதைப் பாராட்டவே விரும்புகிறோம்... 

௦௦



No comments:

Post a Comment