Monday, March 1, 2021

தூது..முகநூல் தொடர் (2)


2வது தூது- (1983- நவம்பர்)    

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

     

    இலங்கையில் போர் மேகம் பரவலாகச் சூழ்ந்த இக்காலப்பகுதியில், இரணடாவது தூது இதழ் மிகச் சிறியளவில் வந்தது.. இதன் ஆசிரிய தலையங்கம்  புதுக் கவிதை எழுதுவோருக்கு ‘’நக்கல்’’ அடிக்கும், அப்போதைய மரபுப் ‘பெரிசு’களின் நடத்தையைக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது.. 


இதில்- மெஹ்ருன் நிஷா ரிசாத்- ரஞ்சினி சரவணமுத்து- குறைஷா முகைடீன்- நிலாதமிழின் தாசன்- ஏ.எம்.எம். நஸீர்- அ.கௌரிதாசன்- றாபீக்- கல்முனை கலீல்- இப்னுஅஷூமத்- சிறிதேவகாந்தன்- சித்தி ஜெரினா கரீம்- ஆகியோர் எழுதியிருந்தனர்.


இவர்களில், நிலாதமிழின்தாசன் எழுதிய ‘மாற்றம் தேவை’ என்ற கவிதை பலதரப்பினரின் கூர் அவதானம் பெற்றது குறிப்பிடத்தக்கது,,


அப்பா/ தம்பியை ஏன் தண்டித்தீர்கள்/ சுண்டுவிரல் தூக்கினான் என்பதற்காகவா/ என்னையும் முன்னர் இப்படித்தான் தண்டித்தீர்கள்/ அதனால்தான் இன்று/ எங்கள் வீட்டுக்/கோழிக்குஞ்சுகளை/ கதறக் கதறத் தூக்கிச் சென்று/ கொடிய பருந்துகள் கொத்தும்போது/ கண்ணீர் மல்கிக் கை பிசைந்து நிற்கிறேன்/ தம்பியை விடுங்கள்/ கொடிய பருந்துகளை வீழ்த்த/ அவன் இப்போதே/ குறிவைத்துப் பழகட்டும்.....

 

காதோரம் பகுதி இடம்பெறவில்லை. கல்முனை புகவம் நடத்தும் புதுக்கவிதைப் போட்டிக்கு தயாராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

௦௦



அழகா

No comments:

Post a Comment