Tuesday, March 2, 2021

தூது...முகநூல் தொடர்..(14)

 14வது தூது. (1988 மார்ச்)

➖➖➖➖➖➖➖➖➖


    புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு பூர்த்தியையும் முன்னிட்டு சற்றுப் பெரியளவில் வந்த இவ்விதழ்  ‘’சமாதான ஒப்பந்தத்தின் பின் சாம்பலாகிப் போன நபிகளின் உம்மத்துகளுக்காக’’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


, இதன் ஆசிரியத் தலையங்கம் 


வெடிகுண்டு குடிகொண்டு குடிமனைகள் வெடியுண்டு

வெடிவெடித்து மடியுயிர்கள்  கோடியுண்டு- இனியும் 

வெடிகுண்டு வெடிக்காமல் மடியுயிர்கள் மரிக்காமல்

குடிகொள்ளும் படி செய்தல் சிறப்பு 


 என்று தொடங்கி-  தமிழ்ப்படை-சிங்களப்படை-இந்தியப்படை- என்று இலங்கை முழுவதும் படை மயமாக இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு படையுமில்லை.. பட்டாளமுமில்லை.. எல்லாப்பக்கத்தாலும் பாதிப்படைந்ததால் நமக்கும் ஒரு பாதிப். படையாவது உருவாக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டுள்ளது..


 மொத்தம் வெளியான 21 கவிதைகளையும் ,


ஜெமீலா ஹனூன் மீராசாஹிப்- ஏ.எச். ஜவ்பர் காரியப்பர்- எம். முகமட் நகீபு- ஏ.எம்.எம். நஸீர் –மதுரம் பியாஸ்-  எம்.ஏ. மாறன்- நிதானிதாசன்- எம்.வை. நஜீப்-  எச்.ஏ. அஸீஸ் Aliyarl Azeez  –தீரன்- அல்-அசூமத்-  கஸ்ஸாலி அஸ் ஷம்ஸ்- Gazzaly Ashshums  ஏஎல் கபூர் – முசம்மிலா மீராசாஹிப்- சாய்ந்தமருது தஸ்மான்-  மதிமகன் ஜாபீர்-  எஸ்.எம்.எம். ராபீக்- ஆகியோர்  எழுதியிருந்தனர்.  


எச்.ஏ. அஸீஸின்  ‘A FORCED PREGNANCY’ என்ற ஆங்கிலக் கவிதை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.. இது, பின்நாளில் பரவலாக மறுபிரசுரங்கள் செய்யப்பட்டு பிரபலமானது..


புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு பூர்த்தியையும் முன்னிட்டு குறும்பா போட்டி ஒன்றுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.. .


இவ்விதழில் NOTICE BOARD எனும் பகுதியில்,  பாலமுனை பாறுக்கின் ‘பதம்’ -  தர்ஹாநகர் ஸுலைமா ஏ சமியின் ‘’வைகறைப் பூக்கள்’’-  ஆசுகவி அன்புடீனின் ‘முகங்கள்’- ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 


தூது வெளிஈட்டாசிரியர் எம்.ஐ.மன்ஸூர்  அவர்களின் திருமணத்தை ஒட்டி அவருக்கு ஒரு வதுவை வாழ்த்தும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


 ஹைக்கூ கவிதைப்பக்கமும், மடல்விடுதூது ஆகிய குறிப்புகளும் வந்துள்ளன..

 

இவ்விதழுக்கு காணிக்கை ரூ..5௦௦/- என்று ஒரு குறும்பாகப் போடப்பட்டுள்ளது.. ரூ.5/-ஆவது அனுப்புவார்கள் என காதோரம் பகுதியில் நம்பிக்கை தெரிவிக்கப்படுவதுடன்,   அக்காலப் பகுதியில் வெளிவந்தவற்றுள் கிடைக்கப்பெற்ற சில நூல்களின் தகவல்களும் உள்ளன.. 


கோகிலா மகேந்திரனின், துயிலும் ஒரு நாள் கலையும்—பிரசவங்கள்-  மௌலவி ஏ,எல். முபாரக்கின்,  ‘இறைபாதை’-  மௌலவி ஆதம்பாவாவின், ‘இஸ்லாமும் கவிதையும்’,  மல்லிகைப் பந்தல் வெளியீடுகளான, அட்டைப்பட ஓவியங்கள்,  ஆகுதி-, என்னில் விழும் நான்,-  மல்லிகைக் கவிதைகள், இரவின் ராகங்கள்,, மற்றும் வகவம் வெளியிட்ட  ‘’வகவம்’’ சஞ்சிகை பற்றிய குறிப்புகளும்  உள்ளன..


இன்னும், முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில்,  முஸ்லிம் எழுத்தாளரின் சிறந்த நூல்களுக்கு பரிசளித்த நிகழ்வில், 


கலைவாதி கலீல், பி.எம். புன்னியாமீன், அல்-அசூமத், ஈழமேகம் பக்கீர்தம்பி-, அன்புமுகையதீன், அ.ச.அப்துஸ் சமது,  ஜுனைதா ஷெரீப், நாகூர் கனி- முக்தார் ஏ. முகம்மது-, நாளிர்-, முபாரக்-, ஆகியோர் பரிசில்களும் விருதுகளும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...


இது சாய்நதமருது நஷனல் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.


௦௦



No comments:

Post a Comment