11வது 12வது தூது (1987 ஜனவரி-ஏப்ரல்)
➖➖➖➖➖➖➖➖➖
உள்நாட்டுப் போர்மூர்க்கம் மிக்கதான காலம் இது.. அடிக்கடி நடக்கும் ஹர்த்தால், கடத்தல்கள், ஷெல்லடிகள், நேரடி மோதல்கள்,.. காரணமாக அச்சகத்திற்குச் செல்ல முடியாத நிலை.. எனவே 11ஆவது 12ஆவது இதழ்களை ஒன்றாகச் சேர்த்து வெளியிட்டோம்.
ஆரையம்பதி ஈஸ்ரன் ஓட்டோ அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.. வேலை முடிந்த தறுவாயில் அச்சக உரிமையாளர் கப்ரியல் அண்ணர் இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால். பல நாட்கள் கழித்து மிகுந்த சிரமத்தின் பேரில் ஆரையம்பதியில் ஒரு இயக்கப் போராளியிடம் முறையிட்டதன் பேரில் அச்சகத்தை பலவந்தமாகத் திறந்து பார்த்தபோது தூது முழுவதும் அச்சடிக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. ஏனைய பல பிரசுரங்கள் திரு. கப்ரியலின் இரத்தத்தில் ஊறிப் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானோம்.
அதைத் தொடர்ந்து மற்ற இயக்கப் போராளிகளால்; நான் விசாரணை என்ற பேரால் தேடப்பட்டேன்.. காரணம் தூது குழுவில் நான் மட்டும் காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் கடமை செய்து கொண்டு ஆரையம்பதியில் இந்த அச்சு வேலைகளை செய்து கொண்டிருந்தேன்... ,
இதனால் நான் பட்டபாடும், ஏற்பட்ட அச்சுறுத்தல்களால், காலவரையற்ற விடுமுறையில் தலைமறைவாகியதும், தனி ஒரு நூலாக எழுதப்படக் கூடியது..
இவ்விதழிலும் பரிமாற்றம் குறும்பா வடிவில் எழுதப்பட்டுள்ளது.
எச்.ஏ. அஸீஸ்- பாத்திமா இன்ஷாப்- சித்தி ஜெசீனா கரீம் Jezeena Careem Nizreen - தேவதைதாசன்-எம்.ஐ.மன்ஸூர்- ஏஎல்.கபூர்- முசம்மிலா மீராசாஹிப்- ஜெமீலா ஹனூன் மீராசாஹிப்- நசீலா மீராமொஹைடீன்- ஏ.எம்.எம். நஸீர்- எஸ். அலவி ஷரிப்தீன்- வாழைச்சேனை அமர்- தீரன்-. கல்முனைக் கமால்-, ரிபாயா ஹானிம்- எம்.ஐ. மன்ஸூர்- மிஸ் ஜவ்பர் அலி Jaufar Ali - கல்முனை ஆதம்- எம். முகமட் நகீபு.. ஆகியோர் இதில் எழுதியிருந்தனர்...
தீவிர யுத்தம் காரணமாக அதற்கேயுரித்தான கவிதைகள்தாம் அதிகமாக இதில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 41 கவிதைகள்.. எச்.ஏ. அஸீஸின் 5 கவிதைகளுடன் அவரது Srilankan Ashtray and Ethnic cigar என்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதையும் இடம்பெற்றுள்ளது..
மடல்விடு தூது பகுதியில் தினகரன் நாளிதழில் தூது பற்றி ‘விக்ரம்’ எழுதிய ஒரு குறிப்பு வந்துள்ளது.. ‘’....தூது புதிய பரிமாணங்களையும், நவீன பரிணாமங்களையும் கொண்ட கவிதைகளை மட்டுமே எதிர்பார்க்கின்றது... மற்றவர்கள் எழுத தேவையில்லை....’’என்று காதோரம் பகுதி பிரகடனம் செய்துள்ளது..
௦௦
No comments:
Post a Comment