Tuesday, March 2, 2021

தூது...முகநூல் தொடர்..(15)

 15வது தூது (1988- ஒக்டோபர்) 

➖➖➖➖➖➖➖➖➖


    வாசகர் எவரும் இதுவரைக்கும் எவ்விதமான பணமனுப்பாததால் இவ்விதழ் முற்றிலும் இலவச வெளியீடாக வந்துள்ளது. இக்காலத்தில்  புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்குமிடையில் உச்சக்கட்ட மோதல் இருந்தது. இலங்கையில் வாரக்கணக்கில் மின்சாரம் இல்லாத ஒரு காலம் இது...எனவே மிகவும் தாமதமாகவே  இவ்விதழ் வந்துள்ளது...


வட-கிழக்கில் நாள் தோறும்  குண்டு

விழுமுயிர்க்கு ஒரு கணக்கா உண்டு..?

விடுதலைப் புலி சுடும் வேட்டை

விழுங்கிவிடும் நாட்டை

வெளியேறும் அமைதிப்படை என்று..?


என்று ஆசிரியத் தலையங்கம் ஆரம்பிக்கிறது.


இந்த இதழில்-   வீ. ஆனந்தன் - பாவேந்தல் பாலமுனை பாறூக் பாவேந்தல் -  ஓட்டமாவடி அஷ்ரப்  Ashroff Shihabdeen – ஏ.எம்.எம். நஸீர் -தீரன்-   கவி இம்தா உவைஸ்- கலைச்சிற்பி- ஆகியோரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. 


இதில் ஓட்டமாவடி அஷ்ரப் (அஷ்ரப் சிஹாப்தீன்) எழுதிய, "என்னைப்பற்றிய கவிதை.. " என்ற கவிதையில் வரும்  ,

/...........

நடப்பதை எழுதலாம் என்றால்...

சிலவேளை

நான் பின்வருமாறு ஆக்கப்படலாம்..

அரச விரோதியாக.. அல்லது அட்ரஸ் இல்லாமல்..../ என்ற வரிகள், ஒரு மட்டத்தில் ஒரு கட்டத்தில் சர்ச்சைக்குள்ளானது... 


கவிஞர். ஏ. இக்பால், 23.OCT.1987  தினகரனில், ‘’... வாசகரின் ஆதரவின்மையால் தமிழ்நாட்டில்  நடை என்ற எட்டை நிறுத்தி விட்டனர்.  அவ்வாறு தூதும் நின்று விடாது, வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்....’’ என்றெழுதிய குறிப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது... 


மற்றும் கல்முனை புகவம் நடத்திய  ‘புதுச்சுவர்’ சஞ்சிகை விமர்சன விழாவில் எம்.ஏ.நுஹ்மான்- சண்முகம் சிவலிங்கம்- பாஸில்- கல்லூரன்- றாபிக் ஆகியோரின் உரைகள் நிகழ்த்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.. ன. 


இது கல்முனை பைன் ஆர்ட். அச்சகத்தில் பதிக்கப்பட்டுள்ளது. 

௦௦



No comments:

Post a Comment