16வது தூது -(1989- ஏப்ரல்)
➖➖➖➖➖➖➖➖➖
இவ்விதழ் ஒரு புதுமையான அமைப்பில் வெளியாகியுள்ளது, பரிமாற்றம் என்னும் ஆசிரியத் தலையங்கம் ஆங்கிலக் கவிதையாக எழுதப்பட்டுள்ளது...
முகம்மது ரஸ்புடீன்- ஏ.எம்.எம். நஸீர்- எம்.ஐ. பௌஸ்தீன்- எம்.ஐ.எம். சுபைர்- Gazzaly Ashshums கஸ்ஸாலி அஸ்- ஷம்ஸ்- எம்.வை. நஜீப்கான்- எச்.ஏ. அஸீஸ்- Sithy Mashoora Suhurudeen மஷூரா ஏ. மஜீத்- மூதூர் சாக்கின்-, வாழைச்சேனை அமர்- ஆகியோர் மொத்தம் 11 கவிதைகளை எழுதியிருந்தனர்..
இவ்விதழில், எம்.ஐ.எம் சுபைர் எழுதிய..
/.....இது என்ன மிருகங்களின் ராஜ்யமா...
தேசியக் கொடியிலும் வாளேந்திய சிங்கம்.../
என்ற கவிதையால் ஒரு சிறு விவாதம் மூண்டு தணிந்தது...
இலங்கையின் முதுபெரும் அரசியல்வாதியும் கல்முனைத் தொகுதியின் முதல் பா.உ. மற்றும் அமைச்சர் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மறைவுக்கு பிரார்த்தித்துள்ளது..
இது அக்கரைப்பற்று ஆர்ஜே. அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது..
முக்கியமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இவ்விதழில், எச் ஏ,. அஸீஸ் ஆங்கிலத்தில் எழுதிய MY REVERENT GURU என்ற கவிதையும், எம்.வை. நஜீப்கான் எழுதிய ‘’ பூமியை இயற்றிய பூமலங்கு’’ என்ற கவிதையும், அக்கவிதைகளின் கீழ் இடப்பட்ட, ‘’பூமலங்கு சாஹிபு ஒலியுல்லாஹ்வின் வெளிப்படுகை’’ (24.03.1989) என்ற வசனமும் கடும் சர்ச்சைகளுக்குள்ளாகின.
கல்முனை புகவம் வெளியீட்டுக் குழுவுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. குழுவும் மூன்று துண்டுகளாக உடைந்தது...
இதனால், தூது இந்த 16 வது இதழுடன் பரிதாபமாகத் தன் மூச்சை இழந்தது...
இதன் பிறகு தூது வரவில்லை.0
No comments:
Post a Comment