7வது தூது- 1985- ஏப்ரல்.
➖➖➖➖➖➖➖➖➖
அபாபீல் என்ற பறவையின் இறகுவிரித்து எழும் தோற்றத்துடனான போட்டோபுளக். செய்யப்பட்டு தூதின் 7 வது இதழ் வெளியானது.. இதில் 17.03.1985 இல் மறைந்த நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது..
இவ்விதழில், நஷீரா லாபீர்- கலைமகள் ஹிதாயா மஜீத்-, பாவேந்தல் பாலமுனை பாறுக்- பாலையூற்று அஷ்றபா Ashrafa Noordeen - சுகைதா கரீம்- ஏ.எம்.எம். நஷீர்- எஸ் கமர்ஜான்;பீபி - ஏ.எல். கபூர்- தர்காநகர் சுலைமா ஏ சமி- ஆகியோர் எழுதியிருந்தனர்.
பரிமாற்றம் எனும் ஆசிரியர் தலையங்கத்தில் எழுத்தாளர் நலன் வங்கி ஒன்றினை ஆரம்பிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதி ரோணியோ இலக்கியச் சிற்றேடுகளின் பொற்காலம் ஆகும்.. அவற்றில் கிடைக்கப் பெற்றவைகளாக- தடாகம் (அன்பிதயன் சிறாஜ்- கலைமகள் ஹிதாயா)---- (றிஸ்ஷ்மி மஜீட்-மாஹிர்) மருதம்--- (கமர்ஜான்பீபி- மருதூர் ஜமால்தீன்) --- அன்புடன் (சித்ரா -ராஜகவி- பாவலர்தாசன்) --- வகவம் (மேமன்கவி)- ---யதார்த்தம் (அஸீஸ் நிஸாருத்தீன்) --- ஞெகிழி (நவாஸ் ஏ. ஹமீட்)--- அக்கினி (மசுறா.ஏமஜீட்)--- அலைஓசை (உடப்பூர் வீரசொக்கன்)--- இளமதி (வாழை.அமர்) ------ காற்று (புஷ்பராஜன்) ---- உடைப்பு ( அஸ்மி-ஜவ்பர்) என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்விதழில் கலையன்பன் ரபீக் வகவம் கவியரங்குகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதியுள்ளார்...
இந்த 7 வது தூது க்கான ஆயத்த வேலைகள் செய்து கொண்டிருந்த இக்காலப்பகுதி மிகவும் பயங்கரமாயிருந்தது... கல்முனை புகவம் குழுவிலிருந்த இளம் கவிஞர் ஏ.ஸீ.எம். ஷபீக்கின் அகால மரணமும்.... காரைதீவு- மாளிகைக்காடு இனக் கலவரமும், தொடர்ச்சியான ஹர்த்தால்களும், பொருட் தட்டுப்பாடுகளும், இயக்கங்களால் முஸ்லிம் இளைஞர்களின் தகவல்கள் வெளியீடுகள், என்பன திரட்டப்பட்டதும், இதனால், ஆசிரியர் குழுவே திக்கொருவராய் சிதறியதும்., எஞ்சியோர் மீண்டும் ஒன்று கூடியதும் தனித்தனி பயங்கர அனுபவங்களே... எனினும் ஏப்ரல் மாதம் தூதைக் கொணர்ந்தோம்..
௦௦
No comments:
Post a Comment