Tuesday, March 2, 2021

தூது...முகநூல் தொடர்..(13)

 13வது தூது (1987 ஜீலை)

➖➖➖➖➖➖➖➖➖


எங்கும் சமாதானப் பேச்சு

எல்லோரிடத்தும் நிம்மதி மூச்சு

எந்நாளும் நிலைத்து நிற்க

ஏற்றதுவாய்த் தீர்வொன்று

எடுத்தெழுதிக் கையொப்ப    மாச்சு 


    ராஜீவ் – ஜெ-ஆர்  சமாதான ஒப்பந்தம் குறித்த குறும்பா வடிவ தலையங்கத்துடன் வெளியான இவ்விதழில்,   மொத்தம் 11 கவிதைகள் வந்திருந்தன..  


ஏ.எம்.எம். நஸீர், - மஷூரா.ஏ, மஜீத்- தீரன்- அலவி ஷரிப்தீன்- எம். முகமட் நகீபு- எச்.ஏ. அஸீஸ் ஆகியோர் இதில் எழுதியுள்ளனர்..


இதில் வெளியான, ‘நமோ..நமோ..விடுதலைப் புலிகள்,,,,’’ என்ற எனது  கவிதையாலும், எம். முகமட் நகிபுவின், ‘இரவுச் சூரியன்’ கவிதையில் வரும், /.........அடோ..முஸ்லிம் கொட்டியா.../ எடே..காக்கா.../ என்ற துப்பாக்கிகளின் வார்த்தைகளை/ சுதந்திரமாகச் சூறையாடிக் கொள்ளும்.............../// என்ற வரிகளாலும்,  ஏ.எம்.எம். நசீரின், ‘நான் ஒரு சிறுபான்மை’ கவிதையில்வரும், /........இனப்பரிசோதனை  நிலையங்களில்../ ஓயா மரக்கல மினுஷு/ லொக்கு கொட்டியா../ ஒலிபரப்பாகும் வார்த்தைகளால் ......../ மனசு/ தேசியத்தை நோக்கி/ வேட்டுகளைத் தீர்க்கும்..../// என்ற வரிகளாலும் ஒரு விசாரணைக்கு வரும்படியான கடித அச்சுறுத்தல் ஏற்பட்டது..


அடுத்த இதழ் நான்காம் ஆண்டு மலராக வெளிவரும் என்றும், அவ்விதழில் வீ. ஆனந்தனின் ஒரு கவிதை வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..


அத்துடன் விமர்சகர் கே.எஸ் சிவகுமாரன்  27.05.1987 ல் The Island ல் எழுதிய தூது பற்றிய  A remarkable  magazine என்ற தலைப்பினாலான குறிப்பு உள்ளது.


 இவ்விதழும் மட். கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

௦௦



No comments:

Post a Comment