Tuesday, March 2, 2021

தூது...முகநூல் தொடர்..(8)

 8வது தூது-- 1985 ஜூலை.

➖➖➖➖➖➖➖➖➖


    இவ்விதழிலிருந்து ஆசிரியர் தலையங்கம் குறும்பா வடிவில் எழுதப்பட்டுள்ளது..   


    இந்த இதழில்- ஷுக்னா லாபீர்- மருதூர் மெய்யொளி- நஸீரா ஸாத் -  எஸ்.எல்.எம். அன்ஸார் —எச்.ஏ.அஸீஸ் –வாழைச்சேனை அமர்- பாரதிப்பிரியா- நவாஸ் ஏ. ஹமீட்- உட்பட 11 பேர் எழுதியிருந்தனர். 


மறுபிரசுரக் கவிதையாக ஓட்டமாவடி அஷ்ரபின்  Ashroff Shihabdeen  ‘எட்டப்பன்’-  பிரசுரமாகியுள்ளது. 


இதில் வெளியான Aliyarl Azeez   எச்.ஏ. அஸீஸின், ‘’85 ஏப்ரல் 12—15’’ என்ற  கவிதையில் வரும், 

‘’..................அல்லாஹு அக்பரும்/ அரிவாள் கத்தியும்/ சாராய நெடியுமாய்/ நாங்கள் ஜிஹாத் செய்யத் தயாரானோம்..../ ......................................../மச்சான் எங்களைக் கட்டித் தழுவு/ உனது தம்மத்தை எங்களுக்கும் கற்றுத் தா/  கோழி புரியாணி வேண்டுமானால் சொல்லு/ அந்த துப்பாக்கிகளையும் தாவேன்/ தூக்கிப் பார்ப்போம்........................./ 

என்று வரும் சில வரிகளினால், எமக்கு ஒரு நெருக்கடியும் அச்சுறுத்தலும் உண்டானதை இன்னும் மறக்க முடியவில்லை..... 


மடல்விடுதூது எனும் வாசகர் கடிதம் பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் இலக்கிய மஞ்சரி பகுதியில் தூது பற்றி ‘....கையில் இறுக்கிப் பிடிக்காவிட்டால் காற்றில் பறந்து விடும் தூது....’ என்று ஒரு விமர்சனம் ஒளிபரப்பியது பிரசுரிக்கப்பட்டுள்ளது.


கல்முனை புகவம் வெளியிட்ட மெஹ்ருன் நிஷா ரிஷாட்டின் ‘விடியலை நோக்கி அவனுக்காக..’ றோணியோ கவிதைத் தொகுப்புக்கான ஒரு விளம்பரம் உள்ளது..  மேலும் டைரி பக்கத்தில்., வைரமுத்து ரசிகர் மன்றம் வெளியீடான ‘மதுகரம்’ கவிஎடு, ‘இளநிலா’ கலை இலக்கிய சஞ்சிகை அறிமுக நிகழ்வு, ‘மருதூர்கொத்தன் சிறுகதைகள்’ எனும் நூல் அறிமுக நிகழ்வு பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.. 


மேலும் ‘நமக்குள்ளே..’ என்ற தலைப்பில்  ‘...இந்த ஆண்டு தூதுக்கு ஒரு சோதனைக் காலம்...’ என்று தொடங்கும் ஒரு போர்க்கால மன உளைச்சல் பற்றிய ஒரு பத்தி உள்ளது..  


இவ்விதழ் 22.03.1985ல்  காலமான நாடக நெறியாளுனர் கே.எம். வாசகருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ்விதழும் மட்டு/கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது..

௦௦



No comments:

Post a Comment