Tuesday, March 2, 2021

தூது...முகநூல் தொடர்..(10)

 10வது தூது-- (1986 ஜூன்.)

➖➖➖➖➖➖➖➖➖

    இவ்விதழ் மூன்றாண்டுப் பூர்த்தி மலராக அமைந்தது. லிபிய மக்கள் மீது அமெரிக்கா வீசிய குண்டுத்தாக்குதலில் பலியான அப்பாவி டியுனீஸிய மக்களுக்கும் 23.03.1986ல் மறைந்த எழுத்தாளர்  டானியல் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  காணிக்கை ரூ,,3/-


ஆசிரியர் தலையங்கம் –

தினந்தோறும் துப்பாக்கிச் சத்தம் 

தீ நரகில் மானுடங்கள்  தத்தம்

தீய்ந்து விடும் உயிருடமை

திரும்பாத சமாதானம்

தீராதா உள்நாட்டு யுத்தம்..

என்று குறும்பாவில் ஆரம்பித்துள்ளது.  


கவிதைப் போட்டி முடிவுகளும் வெளியாகியுள்ளது. நடுவர்களாக அல்அஸோமத்- மேமன்கவி- வீ. ஆனந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.  1ம்பரிசு- ஏ.எம்.எம். நஸீரின் ? (கேள்விக்குறி)  - 2ம் பரிசு நிதானிதாசனின் ‘சமாதானத்தின் தலைமறைவு’- 3ம் பரிசு  நஸீலா மீராமுகைடீனின் ‘வாஷிங்டன் மீசையும் பாபுஜியின் ராட்டினமும்’ மற்றும் மஷூறா மஜீதின்  ‘வடுக்கள் ஆறுவதில்லை’. என்பன பரிசுக்குரியனவாக தெரிவாகியிருந்தன..


    இவ்விதழில், தீரன்- வாழைச்சேனை அமர்-  வாசுதேவன்.- ரஹ்மான். ஏ.கபூர்- ஏ.எம்.எம். நஸீர் –ராபீக்- ரஹ்மத் மன்ஸூர்- நிதானிதாசன்- இப்னு அசூமத்- மஷூரா. ஏ, மஜீத்- ஏஎல் கபூர்- யாழ் ஜெஸீலா மொஹமட் – நஷீலா மீராமொஹிடீன்- அடிமை- நிஹாரா ஷரிப்டீன்-  இளைய கலீபா- முருகு- எம். முகமட் நகீபு- என்று மொத்தம் 21 கவிஞர்கள் கவிதை யாத்திருந்தனர்.


ஹைக்கூ பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. தவிரவும் தூது  நிர்வாக ஆசிரியரும் கல்முனை புகவம் தலைவருமான எஸ்.எம்.எம். ராபிக் அவர்கள் 25.03.1986 இல் இல்லற பந்தத்தில் நுழைந்ததன் நிமித்தம் அவருக்கு எம்மால் வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்துப்பாவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது..


சிற்பியின் ஒரு விலை மகளின் கல்லறை’’ மறுபிரசுரக் கவிதையாக வந்துள்ளது..மடல்விடுதூது பகுதியில் ‘’...இரண்டு ரூபாய்க்கு நான் வாங்கிய ஏமாற்றத்தின் பெயர் தூது’’ என்று பு.பாலகுமார் எழுதிய கடிதம் பிரசுரமாகியுள்ளது..  


    என்னதான் 10 இதழ்கள் வரை வெளியிட்டாலும்  இச்சமயத்தில் எமக்கு ஒரு இலக்கிய அலுப்பு- ஏற்பட்டிருந்தது.. போர்த்தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.. மூத்த கவிஞரின் நரகல் நக்கல் விமர்சனங்கள்.வேறு.. பொருளாதார நெருக்கடி..ஒருபுறம் ..... தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான சீர்கெட்ட உறவுகள்.. தரமான கவிதைகள் கிடைக்கப் பெறாமை.. ஆகியன இந்த அலுப்பின் பின்புறக் காரணிகள்.. என்று காதோரம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆயினும், தமிழறிஞர், கவிஞர்  அல்.அஷூமத் Al Azoomath Abdulazeez  எமக்கு ஒரு உயிர்க் கவிதை மாத்திரை’ தந்து ஊக்குவித்ததை மறக்க முடியாது... அவர் அச்சமயத்தில் எமக்கெழுதிய குறும்பா இது--  


தூதே நீ நேர்வழியில் கற்பாய்- 

தூயானின் வார்த்தைகளில் நிற்பாய்- 

துருப்பிடித்த புண்மைகளை- 

தூக்கியெறி வெந்நரகில்- 

தோள்கொடுப்போம் யாமுள்ளோம் நட்பாய்.


௦௦



No comments:

Post a Comment