6வது தூது- 1985 ஜனவரி
➖➖➖➖➖➖➖➖➖
இவ்விதழின் ஆசிரிய தலையங்கத்தில் அக்கால பொதுக் கவியரங்குகளில் கவிஞர்கள் ஒருவரையொருவர் வசைபாடும் கீழ்த்தர இயல்புக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சித்தி ஜெரீனா கரீம், மஷூரா ஏ மஜீத் Sithy Mashoora Suhurudeen - நி. இராஜம் புஷ்பவனம்- எச்.ஏ. அசீஸ் Aliyarl Azeez - சம்மாந்துறை ஆயிஷா ரஷீத்- மாத்தரைச் செல்வி ஸமினா சஹீத்- திக்குவல்லை சப்வான் Dickwella Safwan - நற்பிட்டிமுனை பளீல்- கடோத்கஜன்- தம்பிலுவில் ஜெகா- நூறுல் ஹக்- எஸ்.எம்.எம். றாபிக்- முதலியோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன...
போக்குவரத்தின் போது திடீரென ஆட்கடத்தல் நிகழும் ஒரு பயங்கர சூழலில், மட்டு.கத்தோலிக்க அச்சகத்திலிருந்து தூதை எடுத்து வர நாங்கள் பயந்து கொண்டிருந்த போது , புகவம் உறுப்பினர், நண்பர் சாய்ந்தமருது பாரூக், தான் நாளைக்கு காத்தான்குடிக்கு போவதாகவும் அப்படியே மட்டக்களப்புக்குச் சென்று தூது இதழ்களை கொண்டு வர முடியும் என்று உறுதியளித்து அடுத்த நாள் போகும் வழியில், தாளங்குடாவுக்கு அண்மையில் வைத்து இனம்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்ட தகவலில் உறைந்து ஒடுங்கிப் போனோம்....
அதன் பின் ஒரு மாதத்தின் பின்னரே தூது வந்தது...
௦௦
No comments:
Post a Comment