4 வது 5வது தூது (1984- மே-ஓகஸ்ட்)- ஆண்டுமலர்.
➗➗➗➗➗➗➗
அன்பளிப்பு ரூ. 4/-
இவ்வாண்டு மலர் 3௦ பக்கங்களுடன்.. புதிய உதயத்தின் புதுமைக் குரல்கள் என்று கட்டியம் கூறி, தூது என்பதை ‘’போட்டோபுலக்’’ செய்து பொத்துவில் அல்-ஹலீஜ் அரபுக்கலாசாலை விளம்பர அனுசரணையுடன் வெளிவந்துள்ளது..
இதற்குத் தேவையான நிதியை வழங்கியவரும், மேயர் சிராஜ் மீராசாஹிப் அவர்களின் தந்தையாரான மர்ஹூம் ஏ.மீராசாஹிப் JPஅவர்களே..
இவ்விதழில், கொக்கூர்கிழான்- செ.குணரத்தினம்- அ. கௌரிதாசன்-பாலையூற்று அஷ்ரபா- Ashrafa Noordeen ஞானக்கண்ணன்- கமருன் நிஷா ரிஷாத்- கல்முனை ஆதம்- பாலமுனை பாறுக் பாவேந்தல்- சித்தி ஜெரீனா கரீம்- Ibnu Asumath இப்னு அசூமத் - முருகு- தீரன்- நிலா தமிழின்தாசன்- மேமன்கவி Memon Kavi - கே.நாகராஜா- எச்.ஏ. அஸீஸ் Aliyarl Azeez - திக்வல்லை ஸப்வான்- Dickwella Safwan மஸீதா ஹம்ஸா- மருதூரான்- அன்பிதயன் சிறாஜ்- நி. இராஜம் புஷ்பவனம்-நற்பிட்டிமுனை பளீல்- மஷூரா ஏ மஜீத்- Sithy Mashoora Suhurudeen ஏ.எம்.எம். நசீர்- அறநிலா- தம்பிலுவில் கலைலங்கா- எம்.ஆர்.சுமன்- நஸீறா அன்சார்- மருதூர்க்கவி- இக்பால்கான்- மருதூர் ஜமால்தீன் மருதூர் ஜமால்தீன்- பாரிஹா- எம்.எம்.எம். நகீபு- தர்ஹாநகர் ஷாரா- ஏ ஜி.ஏ ஜாபிர் ஆகியோர் எழுதியிருந்தனர்.
காதோரம் பகுதி மரபு- புதுக் கவிதைகளின் பயன்பாடு பற்றிப் பேசியது. முக்கியமாக இதுவரை வெளியான தூது இதழ்கள்—சின்னப் பார்வைக்குள்.... என்ற ஒரு விமர்சனத் தொகுப்பை மேமன்கவி விமர்சித்திருந்தார். இதுவரை மொத்தமாக பிரசுரிக்கப்பட்ட 41 கவிதைகளில் 5 மட்டுமே கவிதை என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
பார்வை பகுதியில் - தர்காநகர் ஸபாவின் ‘சந்தம்’- நூறுல்ஹக்கின் ‘சோலை’- க.தணிகாசலத்தின் ‘தாயகம்’- மஷூறா.ஏ மஜீதின் ‘நிறைமதி’- இம்மானுவேல் புஷ்பராஜனின் ‘காற்று’- க.ஐ. யோகராசாவின் ‘இந்துமதி’- சந்தியோ அமிர்தராஜாவின் ‘இதயசங்கமம்’- ஆகிய சஞ்சிகைகளின் அறிமுகம் உள்ளது
பாலம் என்ற பக்கத்தில் தமிழக முன்னோடிப் புதுக்கவிதையாளரின் சில கவிதைகள் வந்துள்ளன..
தராசு என்ற நூல் விமர்சனம் பகுதியில் கலைவாதிகலீலின் -கருவறை யிலிருந்து கல்லறைக்கு- விமர்சனத்தை ஞானக்கண்ணன் எழுதியிருந்தார். மற்றும் இவ்விதழில் 83 ஆடிக்கலவரத்தில் உயிரிழந்தோருக்கும் கவிஞர். ஈழவாணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மடல் விடு தூது என்ற தலைப்பில் வாசகரின் கண்டனக்கடிதங்கள் சிலவும் பிரசுரிக்கப்பட்டுள்ளன...
௦௦
No comments:
Post a Comment