Sunday, April 25, 2021

திக்குவல்லை கமால்

Dickwella Kamal

    இலக்கியத் தகவல் :

சாயந்தமருது விலிருந்து 1980 நடுப் பகுதியில் ' தூது ' என்றொரு கவிதை இதழ் வெளிவந்துள்ளது. 06 ம் 14 ம் இதழ்கள் இவை.பக்கங்கள் குறைவாயினும் ஒரு நிறைவு தெரிகிறது.ஆசிரியர் ,  தீரன்- ஆர் .எம்.நௌஷாத் மேலதிக தகவல்களைப் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, March 2, 2021

தூது..முகநூல் தொடர்..(1)


1வது தூது- (1983 ஓகஸ்ட்)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

 ‘இலக்கியத் தூதே இலட்சியத் தூது’ என்ற மகுட வாசகத்துடன் 6 பக்கங்களுடன் கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல் சேர், பாவலர் பசில் காரியப்பர் சேர்  ஆகியோரின் மறைமுக ஆதரவுடன் வெளியானது முதலாவது தூது. அன்பளிப்பு ரூ;1/-.


இதில் ஜமீல் சேர் அவர்களின் சிந்தனையில் உருவான இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கம் கூறியது...

 

இவ்விதழில், கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா ஷரீப்- பூபால் கதிரவேல்- மஷூறா.ஏ மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்-  ரஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..  


எம்.ஆர். சுமனின், காதோரம் என்னும் இலக்கியத் தகவல் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் ‘மாருதம்’- அல் அஷூமத்தின் ‘பூபாளம்’-  என்.பி. கனகலிங்கத்தின் ‘சந்திப்பு’- கணமகேஸ்வரனின் ‘தாரகை’- குமரன் சஞ்சிகையின் 65 வது இதழ் ஆகிய சஞ்சிகைகளின் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.


ஆசிரியர்; ஆர்.எம். நௌஷாத்

இணை ஆசிரியர்கள்; கல்முனை ஆதம், எஸ்.எம்.எம். றாபிக்

கல்முனை பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தில்  நண்பர் கல்முனை முபாரக்கின் ‘அல்-ஜஸீரா’ அச்சுச் சாதனங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.. வெளியிட்டாசிரியர்.; கல்முனை அபூ.

௦௦



தூது...முகநூல் தொடர்..(16)

 16வது தூது -(1989- ஏப்ரல்)

➖➖➖➖➖➖➖➖➖


    இவ்விதழ் ஒரு புதுமையான அமைப்பில் வெளியாகியுள்ளது, பரிமாற்றம் என்னும் ஆசிரியத் தலையங்கம்  ஆங்கிலக் கவிதையாக எழுதப்பட்டுள்ளது... 


முகம்மது ரஸ்புடீன்- ஏ.எம்.எம். நஸீர்- எம்.ஐ. பௌஸ்தீன்- எம்.ஐ.எம். சுபைர்- Gazzaly Ashshums  கஸ்ஸாலி அஸ்- ஷம்ஸ்- எம்.வை. நஜீப்கான்- எச்.ஏ. அஸீஸ்-   Sithy Mashoora Suhurudeen  மஷூரா ஏ. மஜீத்- மூதூர் சாக்கின்-, வாழைச்சேனை அமர்- ஆகியோர் மொத்தம் 11 கவிதைகளை எழுதியிருந்தனர்.. 


இவ்விதழில், எம்.ஐ.எம் சுபைர்  எழுதிய..

/.....இது என்ன மிருகங்களின் ராஜ்யமா...

தேசியக் கொடியிலும் வாளேந்திய சிங்கம்.../


 என்ற கவிதையால் ஒரு சிறு விவாதம் மூண்டு தணிந்தது...


இலங்கையின் முதுபெரும் அரசியல்வாதியும் கல்முனைத் தொகுதியின் முதல் பா.உ. மற்றும் அமைச்சர்  கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மறைவுக்கு பிரார்த்தித்துள்ளது..


இது அக்கரைப்பற்று ஆர்ஜே. அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது..


 முக்கியமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இவ்விதழில், எச் ஏ,. அஸீஸ் ஆங்கிலத்தில் எழுதிய MY REVERENT GURU என்ற கவிதையும், எம்.வை. நஜீப்கான் எழுதிய  ‘’ பூமியை இயற்றிய பூமலங்கு’’ என்ற கவிதையும், அக்கவிதைகளின்  கீழ் இடப்பட்ட, ‘’பூமலங்கு சாஹிபு ஒலியுல்லாஹ்வின் வெளிப்படுகை’’ (24.03.1989) என்ற வசனமும் கடும் சர்ச்சைகளுக்குள்ளாகின.

கல்முனை புகவம் வெளியீட்டுக் குழுவுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. குழுவும் மூன்று துண்டுகளாக உடைந்தது...


இதனால்,  தூது இந்த 16 வது இதழுடன் பரிதாபமாகத் தன் மூச்சை இழந்தது... 


இதன் பிறகு தூது வரவில்லை.0



தூது...முகநூல் தொடர்..(15)

 15வது தூது (1988- ஒக்டோபர்) 

➖➖➖➖➖➖➖➖➖


    வாசகர் எவரும் இதுவரைக்கும் எவ்விதமான பணமனுப்பாததால் இவ்விதழ் முற்றிலும் இலவச வெளியீடாக வந்துள்ளது. இக்காலத்தில்  புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்குமிடையில் உச்சக்கட்ட மோதல் இருந்தது. இலங்கையில் வாரக்கணக்கில் மின்சாரம் இல்லாத ஒரு காலம் இது...எனவே மிகவும் தாமதமாகவே  இவ்விதழ் வந்துள்ளது...


வட-கிழக்கில் நாள் தோறும்  குண்டு

விழுமுயிர்க்கு ஒரு கணக்கா உண்டு..?

விடுதலைப் புலி சுடும் வேட்டை

விழுங்கிவிடும் நாட்டை

வெளியேறும் அமைதிப்படை என்று..?


என்று ஆசிரியத் தலையங்கம் ஆரம்பிக்கிறது.


இந்த இதழில்-   வீ. ஆனந்தன் - பாவேந்தல் பாலமுனை பாறூக் பாவேந்தல் -  ஓட்டமாவடி அஷ்ரப்  Ashroff Shihabdeen – ஏ.எம்.எம். நஸீர் -தீரன்-   கவி இம்தா உவைஸ்- கலைச்சிற்பி- ஆகியோரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. 


இதில் ஓட்டமாவடி அஷ்ரப் (அஷ்ரப் சிஹாப்தீன்) எழுதிய, "என்னைப்பற்றிய கவிதை.. " என்ற கவிதையில் வரும்  ,

/...........

நடப்பதை எழுதலாம் என்றால்...

சிலவேளை

நான் பின்வருமாறு ஆக்கப்படலாம்..

அரச விரோதியாக.. அல்லது அட்ரஸ் இல்லாமல்..../ என்ற வரிகள், ஒரு மட்டத்தில் ஒரு கட்டத்தில் சர்ச்சைக்குள்ளானது... 


கவிஞர். ஏ. இக்பால், 23.OCT.1987  தினகரனில், ‘’... வாசகரின் ஆதரவின்மையால் தமிழ்நாட்டில்  நடை என்ற எட்டை நிறுத்தி விட்டனர்.  அவ்வாறு தூதும் நின்று விடாது, வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்....’’ என்றெழுதிய குறிப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது... 


மற்றும் கல்முனை புகவம் நடத்திய  ‘புதுச்சுவர்’ சஞ்சிகை விமர்சன விழாவில் எம்.ஏ.நுஹ்மான்- சண்முகம் சிவலிங்கம்- பாஸில்- கல்லூரன்- றாபிக் ஆகியோரின் உரைகள் நிகழ்த்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.. ன. 


இது கல்முனை பைன் ஆர்ட். அச்சகத்தில் பதிக்கப்பட்டுள்ளது. 

௦௦



தூது...முகநூல் தொடர்..(14)

 14வது தூது. (1988 மார்ச்)

➖➖➖➖➖➖➖➖➖


    புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு பூர்த்தியையும் முன்னிட்டு சற்றுப் பெரியளவில் வந்த இவ்விதழ்  ‘’சமாதான ஒப்பந்தத்தின் பின் சாம்பலாகிப் போன நபிகளின் உம்மத்துகளுக்காக’’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


, இதன் ஆசிரியத் தலையங்கம் 


வெடிகுண்டு குடிகொண்டு குடிமனைகள் வெடியுண்டு

வெடிவெடித்து மடியுயிர்கள்  கோடியுண்டு- இனியும் 

வெடிகுண்டு வெடிக்காமல் மடியுயிர்கள் மரிக்காமல்

குடிகொள்ளும் படி செய்தல் சிறப்பு 


 என்று தொடங்கி-  தமிழ்ப்படை-சிங்களப்படை-இந்தியப்படை- என்று இலங்கை முழுவதும் படை மயமாக இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு படையுமில்லை.. பட்டாளமுமில்லை.. எல்லாப்பக்கத்தாலும் பாதிப்படைந்ததால் நமக்கும் ஒரு பாதிப். படையாவது உருவாக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டுள்ளது..


 மொத்தம் வெளியான 21 கவிதைகளையும் ,


ஜெமீலா ஹனூன் மீராசாஹிப்- ஏ.எச். ஜவ்பர் காரியப்பர்- எம். முகமட் நகீபு- ஏ.எம்.எம். நஸீர் –மதுரம் பியாஸ்-  எம்.ஏ. மாறன்- நிதானிதாசன்- எம்.வை. நஜீப்-  எச்.ஏ. அஸீஸ் Aliyarl Azeez  –தீரன்- அல்-அசூமத்-  கஸ்ஸாலி அஸ் ஷம்ஸ்- Gazzaly Ashshums  ஏஎல் கபூர் – முசம்மிலா மீராசாஹிப்- சாய்ந்தமருது தஸ்மான்-  மதிமகன் ஜாபீர்-  எஸ்.எம்.எம். ராபீக்- ஆகியோர்  எழுதியிருந்தனர்.  


எச்.ஏ. அஸீஸின்  ‘A FORCED PREGNANCY’ என்ற ஆங்கிலக் கவிதை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.. இது, பின்நாளில் பரவலாக மறுபிரசுரங்கள் செய்யப்பட்டு பிரபலமானது..


புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு பூர்த்தியையும் முன்னிட்டு குறும்பா போட்டி ஒன்றுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.. .


இவ்விதழில் NOTICE BOARD எனும் பகுதியில்,  பாலமுனை பாறுக்கின் ‘பதம்’ -  தர்ஹாநகர் ஸுலைமா ஏ சமியின் ‘’வைகறைப் பூக்கள்’’-  ஆசுகவி அன்புடீனின் ‘முகங்கள்’- ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 


தூது வெளிஈட்டாசிரியர் எம்.ஐ.மன்ஸூர்  அவர்களின் திருமணத்தை ஒட்டி அவருக்கு ஒரு வதுவை வாழ்த்தும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


 ஹைக்கூ கவிதைப்பக்கமும், மடல்விடுதூது ஆகிய குறிப்புகளும் வந்துள்ளன..

 

இவ்விதழுக்கு காணிக்கை ரூ..5௦௦/- என்று ஒரு குறும்பாகப் போடப்பட்டுள்ளது.. ரூ.5/-ஆவது அனுப்புவார்கள் என காதோரம் பகுதியில் நம்பிக்கை தெரிவிக்கப்படுவதுடன்,   அக்காலப் பகுதியில் வெளிவந்தவற்றுள் கிடைக்கப்பெற்ற சில நூல்களின் தகவல்களும் உள்ளன.. 


கோகிலா மகேந்திரனின், துயிலும் ஒரு நாள் கலையும்—பிரசவங்கள்-  மௌலவி ஏ,எல். முபாரக்கின்,  ‘இறைபாதை’-  மௌலவி ஆதம்பாவாவின், ‘இஸ்லாமும் கவிதையும்’,  மல்லிகைப் பந்தல் வெளியீடுகளான, அட்டைப்பட ஓவியங்கள்,  ஆகுதி-, என்னில் விழும் நான்,-  மல்லிகைக் கவிதைகள், இரவின் ராகங்கள்,, மற்றும் வகவம் வெளியிட்ட  ‘’வகவம்’’ சஞ்சிகை பற்றிய குறிப்புகளும்  உள்ளன..


இன்னும், முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில்,  முஸ்லிம் எழுத்தாளரின் சிறந்த நூல்களுக்கு பரிசளித்த நிகழ்வில், 


கலைவாதி கலீல், பி.எம். புன்னியாமீன், அல்-அசூமத், ஈழமேகம் பக்கீர்தம்பி-, அன்புமுகையதீன், அ.ச.அப்துஸ் சமது,  ஜுனைதா ஷெரீப், நாகூர் கனி- முக்தார் ஏ. முகம்மது-, நாளிர்-, முபாரக்-, ஆகியோர் பரிசில்களும் விருதுகளும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...


இது சாய்நதமருது நஷனல் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.


௦௦



தூது...முகநூல் தொடர்..(13)

 13வது தூது (1987 ஜீலை)

➖➖➖➖➖➖➖➖➖


எங்கும் சமாதானப் பேச்சு

எல்லோரிடத்தும் நிம்மதி மூச்சு

எந்நாளும் நிலைத்து நிற்க

ஏற்றதுவாய்த் தீர்வொன்று

எடுத்தெழுதிக் கையொப்ப    மாச்சு 


    ராஜீவ் – ஜெ-ஆர்  சமாதான ஒப்பந்தம் குறித்த குறும்பா வடிவ தலையங்கத்துடன் வெளியான இவ்விதழில்,   மொத்தம் 11 கவிதைகள் வந்திருந்தன..  


ஏ.எம்.எம். நஸீர், - மஷூரா.ஏ, மஜீத்- தீரன்- அலவி ஷரிப்தீன்- எம். முகமட் நகீபு- எச்.ஏ. அஸீஸ் ஆகியோர் இதில் எழுதியுள்ளனர்..


இதில் வெளியான, ‘நமோ..நமோ..விடுதலைப் புலிகள்,,,,’’ என்ற எனது  கவிதையாலும், எம். முகமட் நகிபுவின், ‘இரவுச் சூரியன்’ கவிதையில் வரும், /.........அடோ..முஸ்லிம் கொட்டியா.../ எடே..காக்கா.../ என்ற துப்பாக்கிகளின் வார்த்தைகளை/ சுதந்திரமாகச் சூறையாடிக் கொள்ளும்.............../// என்ற வரிகளாலும்,  ஏ.எம்.எம். நசீரின், ‘நான் ஒரு சிறுபான்மை’ கவிதையில்வரும், /........இனப்பரிசோதனை  நிலையங்களில்../ ஓயா மரக்கல மினுஷு/ லொக்கு கொட்டியா../ ஒலிபரப்பாகும் வார்த்தைகளால் ......../ மனசு/ தேசியத்தை நோக்கி/ வேட்டுகளைத் தீர்க்கும்..../// என்ற வரிகளாலும் ஒரு விசாரணைக்கு வரும்படியான கடித அச்சுறுத்தல் ஏற்பட்டது..


அடுத்த இதழ் நான்காம் ஆண்டு மலராக வெளிவரும் என்றும், அவ்விதழில் வீ. ஆனந்தனின் ஒரு கவிதை வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..


அத்துடன் விமர்சகர் கே.எஸ் சிவகுமாரன்  27.05.1987 ல் The Island ல் எழுதிய தூது பற்றிய  A remarkable  magazine என்ற தலைப்பினாலான குறிப்பு உள்ளது.


 இவ்விதழும் மட். கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

௦௦



தூது...முகநூல் தொடர்..(11&12)

 11வது 12வது  தூது (1987 ஜனவரி-ஏப்ரல்)

➖➖➖➖➖➖➖➖➖


    உள்நாட்டுப் போர்மூர்க்கம் மிக்கதான காலம் இது.. அடிக்கடி நடக்கும் ஹர்த்தால், கடத்தல்கள், ஷெல்லடிகள், நேரடி மோதல்கள்,.. காரணமாக அச்சகத்திற்குச் செல்ல முடியாத நிலை.. எனவே 11ஆவது 12ஆவது இதழ்களை ஒன்றாகச் சேர்த்து வெளியிட்டோம்.  


ஆரையம்பதி  ஈஸ்ரன் ஓட்டோ அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.. வேலை முடிந்த தறுவாயில் அச்சக உரிமையாளர் கப்ரியல் அண்ணர் இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இதனால். பல நாட்கள் கழித்து மிகுந்த சிரமத்தின் பேரில் ஆரையம்பதியில் ஒரு இயக்கப் போராளியிடம் முறையிட்டதன் பேரில் அச்சகத்தை  பலவந்தமாகத் திறந்து பார்த்தபோது தூது முழுவதும் அச்சடிக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. ஏனைய பல பிரசுரங்கள் திரு. கப்ரியலின் இரத்தத்தில் ஊறிப் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானோம்.  


அதைத் தொடர்ந்து மற்ற இயக்கப் போராளிகளால்; நான் விசாரணை என்ற பேரால் தேடப்பட்டேன்.. காரணம் தூது குழுவில் நான் மட்டும் காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் கடமை செய்து கொண்டு ஆரையம்பதியில் இந்த அச்சு வேலைகளை செய்து கொண்டிருந்தேன்... , 


இதனால் நான் பட்டபாடும், ஏற்பட்ட அச்சுறுத்தல்களால், காலவரையற்ற விடுமுறையில் தலைமறைவாகியதும்,  தனி ஒரு நூலாக எழுதப்படக் கூடியது..

இவ்விதழிலும் பரிமாற்றம் குறும்பா வடிவில் எழுதப்பட்டுள்ளது.

எச்.ஏ. அஸீஸ்- பாத்திமா இன்ஷாப்- சித்தி ஜெசீனா கரீம் Jezeena Careem Nizreen - தேவதைதாசன்-எம்.ஐ.மன்ஸூர்- ஏஎல்.கபூர்-  முசம்மிலா மீராசாஹிப்- ஜெமீலா ஹனூன் மீராசாஹிப்- நசீலா மீராமொஹைடீன்- ஏ.எம்.எம். நஸீர்- எஸ். அலவி ஷரிப்தீன்- வாழைச்சேனை அமர்-  தீரன்-. கல்முனைக் கமால்-,  ரிபாயா ஹானிம்- எம்.ஐ. மன்ஸூர்-  மிஸ் ஜவ்பர் அலி Jaufar Ali - கல்முனை ஆதம்- எம். முகமட் நகீபு.. ஆகியோர் இதில் எழுதியிருந்தனர்...


தீவிர யுத்தம் காரணமாக அதற்கேயுரித்தான கவிதைகள்தாம் அதிகமாக இதில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 41 கவிதைகள்..  எச்.ஏ. அஸீஸின்  5 கவிதைகளுடன் அவரது  Srilankan Ashtray and  Ethnic cigar என்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதையும் இடம்பெற்றுள்ளது..


மடல்விடு தூது பகுதியில் தினகரன் நாளிதழில் தூது பற்றி ‘விக்ரம்’ எழுதிய ஒரு குறிப்பு வந்துள்ளது.. ‘’....தூது புதிய பரிமாணங்களையும், நவீன பரிணாமங்களையும் கொண்ட கவிதைகளை மட்டுமே எதிர்பார்க்கின்றது... மற்றவர்கள் எழுத தேவையில்லை....’’என்று காதோரம் பகுதி பிரகடனம் செய்துள்ளது..

௦௦



தூது...முகநூல் தொடர்..(10)

 10வது தூது-- (1986 ஜூன்.)

➖➖➖➖➖➖➖➖➖

    இவ்விதழ் மூன்றாண்டுப் பூர்த்தி மலராக அமைந்தது. லிபிய மக்கள் மீது அமெரிக்கா வீசிய குண்டுத்தாக்குதலில் பலியான அப்பாவி டியுனீஸிய மக்களுக்கும் 23.03.1986ல் மறைந்த எழுத்தாளர்  டானியல் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  காணிக்கை ரூ,,3/-


ஆசிரியர் தலையங்கம் –

தினந்தோறும் துப்பாக்கிச் சத்தம் 

தீ நரகில் மானுடங்கள்  தத்தம்

தீய்ந்து விடும் உயிருடமை

திரும்பாத சமாதானம்

தீராதா உள்நாட்டு யுத்தம்..

என்று குறும்பாவில் ஆரம்பித்துள்ளது.  


கவிதைப் போட்டி முடிவுகளும் வெளியாகியுள்ளது. நடுவர்களாக அல்அஸோமத்- மேமன்கவி- வீ. ஆனந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.  1ம்பரிசு- ஏ.எம்.எம். நஸீரின் ? (கேள்விக்குறி)  - 2ம் பரிசு நிதானிதாசனின் ‘சமாதானத்தின் தலைமறைவு’- 3ம் பரிசு  நஸீலா மீராமுகைடீனின் ‘வாஷிங்டன் மீசையும் பாபுஜியின் ராட்டினமும்’ மற்றும் மஷூறா மஜீதின்  ‘வடுக்கள் ஆறுவதில்லை’. என்பன பரிசுக்குரியனவாக தெரிவாகியிருந்தன..


    இவ்விதழில், தீரன்- வாழைச்சேனை அமர்-  வாசுதேவன்.- ரஹ்மான். ஏ.கபூர்- ஏ.எம்.எம். நஸீர் –ராபீக்- ரஹ்மத் மன்ஸூர்- நிதானிதாசன்- இப்னு அசூமத்- மஷூரா. ஏ, மஜீத்- ஏஎல் கபூர்- யாழ் ஜெஸீலா மொஹமட் – நஷீலா மீராமொஹிடீன்- அடிமை- நிஹாரா ஷரிப்டீன்-  இளைய கலீபா- முருகு- எம். முகமட் நகீபு- என்று மொத்தம் 21 கவிஞர்கள் கவிதை யாத்திருந்தனர்.


ஹைக்கூ பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. தவிரவும் தூது  நிர்வாக ஆசிரியரும் கல்முனை புகவம் தலைவருமான எஸ்.எம்.எம். ராபிக் அவர்கள் 25.03.1986 இல் இல்லற பந்தத்தில் நுழைந்ததன் நிமித்தம் அவருக்கு எம்மால் வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்துப்பாவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது..


சிற்பியின் ஒரு விலை மகளின் கல்லறை’’ மறுபிரசுரக் கவிதையாக வந்துள்ளது..மடல்விடுதூது பகுதியில் ‘’...இரண்டு ரூபாய்க்கு நான் வாங்கிய ஏமாற்றத்தின் பெயர் தூது’’ என்று பு.பாலகுமார் எழுதிய கடிதம் பிரசுரமாகியுள்ளது..  


    என்னதான் 10 இதழ்கள் வரை வெளியிட்டாலும்  இச்சமயத்தில் எமக்கு ஒரு இலக்கிய அலுப்பு- ஏற்பட்டிருந்தது.. போர்த்தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.. மூத்த கவிஞரின் நரகல் நக்கல் விமர்சனங்கள்.வேறு.. பொருளாதார நெருக்கடி..ஒருபுறம் ..... தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான சீர்கெட்ட உறவுகள்.. தரமான கவிதைகள் கிடைக்கப் பெறாமை.. ஆகியன இந்த அலுப்பின் பின்புறக் காரணிகள்.. என்று காதோரம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆயினும், தமிழறிஞர், கவிஞர்  அல்.அஷூமத் Al Azoomath Abdulazeez  எமக்கு ஒரு உயிர்க் கவிதை மாத்திரை’ தந்து ஊக்குவித்ததை மறக்க முடியாது... அவர் அச்சமயத்தில் எமக்கெழுதிய குறும்பா இது--  


தூதே நீ நேர்வழியில் கற்பாய்- 

தூயானின் வார்த்தைகளில் நிற்பாய்- 

துருப்பிடித்த புண்மைகளை- 

தூக்கியெறி வெந்நரகில்- 

தோள்கொடுப்போம் யாமுள்ளோம் நட்பாய்.


௦௦



தூது...முகநூல் தொடர்...(9)..

 9 வது தூது- 1985 நவம்பர்)

➖➖➖➖➖➖➖➖➖


    ‘’இலக்கியப் பாதையில் மூன்றாம் வருட மைல்கல்’’ என்ற கொட்டெழுத்துக்களுடன் வெளியான இவ்விதழில ஆசிரியர் தலையங்கம்  வெண்பா வடிவில் உள்ளது..


    இவ்விதழில், ஏ.எம்.எம். நஸீர்-  சாரணா கையும்- யாழ் ஜெஸீலா முகமட்- நஸீலா மீராமுகைடீன்- எம்.ஐ.எம். சுபைர்- எஸ்.எம்.எம். ராபீக்,- தீரன்- நஸீரா சாத்- எச்.ஏ. அஸீஸ்  உட்பட மேலும் பலர் எழுதியுள்ளனர். 


குறிப்பாக எச்.ஏ அஸீஸின்  ‘போதி மரத்தின் கீழிருந்து..’. என்ற கவிதையை இக்காலத்துக்கும் பொருத்திப் பார்க்க கூடியதாகவுள்ளது ஓர் ஆச்சரியமே..  அதிலிருந்து சில வரிகள்--  


----- பள்ளிவாயிலா யாருக்கு..? 

நாளைய பெரஹர...—

அங்கேதான் தொடங்குமாம் 

எல்லாம் இழந்து – 

எல்லாம் இழந்து 

அரச மரத்தின் 

விதைகளைத் தூவும் காக்கைகளுக்கு  

அழைப்பு விடுங்கள்- 

உங்கள் தலையின் மீதும் 

ஒன்றைத் தூவக் கூடும்- 

சந்தோஷம்தானே...- 

கசாப்புக் கடைகளைத் 

திறந்தே வைத்திருங்கள்.. // 


மற்றும்,  தூது கவியேட்டின் மூன்றாண்டுப் பூர்த்தியையும், கல்முனை புகவம் அமைப்பின் ஐந்தாண்டு நிறைவையும் ஒட்டி நடத்தப்படும்  கவிதைப்போட்டி விளம்பரத்தில் 1 ஆம் பரிசு 1௦௦/-, 2 ஆம் பரிசு 5௦/-, 3ஆம் பரிசு 25/-, வீதம் இரு கவிதைகளுக்கு வழங்கப்படும் என்றும்  இத்தொகையை கல்முனை ஷியாமா ரைஸ் மில் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .. 

மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தூதின் விலை 2/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது... 


மடல்விடுதூது பகுதியில், 1985.10.05 ஆம் திகதி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் இலக்கிய மஞ்சரி பகுதியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி இங்கு பிரசுரமாகியுள்ளது.....’’.....பரிமாற்றம் என்ற ஆசிரியர் கருத்து குறும்பாவில் அமைந்துள்ளது.  சீண்டப்படாது கிடந்த இதன் அமைப்பைப் புரிந்து கொண்டு ஆக்கம் செய்து உயிர்ப்பித்ததை பாராட்டலாம்.ஷுக்னா லாபீரின் 83 ஜூ(வா)லை உய்ரித்துடிப்பு மிக்கது.. எச்.ஏ. அசீஸினதும், நவாஸ் ஏ ஹமீதினதும்  கவிதைகள் கோடிட்டுக் காட்டக் கூடியன..  கையளவு உள்ள தூது  கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய பகுதி மடல் விடு தூது ஆகும்.. எமது பார்வையில் கூட்டு மொத்தமாக தூதைப் பாராட்டவே விரும்புகிறோம்... 

௦௦



தூது...முகநூல் தொடர்..(8)

 8வது தூது-- 1985 ஜூலை.

➖➖➖➖➖➖➖➖➖


    இவ்விதழிலிருந்து ஆசிரியர் தலையங்கம் குறும்பா வடிவில் எழுதப்பட்டுள்ளது..   


    இந்த இதழில்- ஷுக்னா லாபீர்- மருதூர் மெய்யொளி- நஸீரா ஸாத் -  எஸ்.எல்.எம். அன்ஸார் —எச்.ஏ.அஸீஸ் –வாழைச்சேனை அமர்- பாரதிப்பிரியா- நவாஸ் ஏ. ஹமீட்- உட்பட 11 பேர் எழுதியிருந்தனர். 


மறுபிரசுரக் கவிதையாக ஓட்டமாவடி அஷ்ரபின்  Ashroff Shihabdeen  ‘எட்டப்பன்’-  பிரசுரமாகியுள்ளது. 


இதில் வெளியான Aliyarl Azeez   எச்.ஏ. அஸீஸின், ‘’85 ஏப்ரல் 12—15’’ என்ற  கவிதையில் வரும், 

‘’..................அல்லாஹு அக்பரும்/ அரிவாள் கத்தியும்/ சாராய நெடியுமாய்/ நாங்கள் ஜிஹாத் செய்யத் தயாரானோம்..../ ......................................../மச்சான் எங்களைக் கட்டித் தழுவு/ உனது தம்மத்தை எங்களுக்கும் கற்றுத் தா/  கோழி புரியாணி வேண்டுமானால் சொல்லு/ அந்த துப்பாக்கிகளையும் தாவேன்/ தூக்கிப் பார்ப்போம்........................./ 

என்று வரும் சில வரிகளினால், எமக்கு ஒரு நெருக்கடியும் அச்சுறுத்தலும் உண்டானதை இன்னும் மறக்க முடியவில்லை..... 


மடல்விடுதூது எனும் வாசகர் கடிதம் பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் இலக்கிய மஞ்சரி பகுதியில் தூது பற்றி ‘....கையில் இறுக்கிப் பிடிக்காவிட்டால் காற்றில் பறந்து விடும் தூது....’ என்று ஒரு விமர்சனம் ஒளிபரப்பியது பிரசுரிக்கப்பட்டுள்ளது.


கல்முனை புகவம் வெளியிட்ட மெஹ்ருன் நிஷா ரிஷாட்டின் ‘விடியலை நோக்கி அவனுக்காக..’ றோணியோ கவிதைத் தொகுப்புக்கான ஒரு விளம்பரம் உள்ளது..  மேலும் டைரி பக்கத்தில்., வைரமுத்து ரசிகர் மன்றம் வெளியீடான ‘மதுகரம்’ கவிஎடு, ‘இளநிலா’ கலை இலக்கிய சஞ்சிகை அறிமுக நிகழ்வு, ‘மருதூர்கொத்தன் சிறுகதைகள்’ எனும் நூல் அறிமுக நிகழ்வு பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.. 


மேலும் ‘நமக்குள்ளே..’ என்ற தலைப்பில்  ‘...இந்த ஆண்டு தூதுக்கு ஒரு சோதனைக் காலம்...’ என்று தொடங்கும் ஒரு போர்க்கால மன உளைச்சல் பற்றிய ஒரு பத்தி உள்ளது..  


இவ்விதழ் 22.03.1985ல்  காலமான நாடக நெறியாளுனர் கே.எம். வாசகருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ்விதழும் மட்டு/கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது..

௦௦



Monday, March 1, 2021

தூது...முகநூல் தொடர்...(7)

 7வது தூது- 1985- ஏப்ரல்.

➖➖➖➖➖➖➖➖➖


    அபாபீல் என்ற பறவையின் இறகுவிரித்து எழும் தோற்றத்துடனான  போட்டோபுளக். செய்யப்பட்டு தூதின் 7 வது இதழ் வெளியானது..  இதில் 17.03.1985 இல் மறைந்த நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.. 


இவ்விதழில், நஷீரா லாபீர்- கலைமகள் ஹிதாயா மஜீத்-, பாவேந்தல் பாலமுனை பாறுக்- பாலையூற்று அஷ்றபா Ashrafa Noordeen - சுகைதா கரீம்- ஏ.எம்.எம். நஷீர்- எஸ் கமர்ஜான்;பீபி -   ஏ.எல். கபூர்- தர்காநகர் சுலைமா ஏ சமி-  ஆகியோர் எழுதியிருந்தனர்.  

பரிமாற்றம் எனும் ஆசிரியர் தலையங்கத்தில் எழுத்தாளர் நலன் வங்கி ஒன்றினை ஆரம்பிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இக்காலப் பகுதி ரோணியோ  இலக்கியச் சிற்றேடுகளின் பொற்காலம் ஆகும்..  அவற்றில் கிடைக்கப் பெற்றவைகளாக- தடாகம் (அன்பிதயன் சிறாஜ்- கலைமகள் ஹிதாயா)----  (றிஸ்ஷ்மி மஜீட்-மாஹிர்) மருதம்--- (கமர்ஜான்பீபி- மருதூர் ஜமால்தீன்) --- அன்புடன் (சித்ரா -ராஜகவி- பாவலர்தாசன்) --- வகவம் (மேமன்கவி)- ---யதார்த்தம் (அஸீஸ் நிஸாருத்தீன்) --- ஞெகிழி (நவாஸ் ஏ. ஹமீட்)--- அக்கினி (மசுறா.ஏமஜீட்)---  அலைஓசை (உடப்பூர் வீரசொக்கன்)---  இளமதி (வாழை.அமர்) ------ காற்று (புஷ்பராஜன்) ----  உடைப்பு ( அஸ்மி-ஜவ்பர்) என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.  


இவ்விதழில் கலையன்பன் ரபீக் வகவம் கவியரங்குகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதியுள்ளார்...


இந்த 7 வது தூது க்கான ஆயத்த வேலைகள் செய்து கொண்டிருந்த இக்காலப்பகுதி மிகவும் பயங்கரமாயிருந்தது...  கல்முனை புகவம் குழுவிலிருந்த இளம் கவிஞர் ஏ.ஸீ.எம். ஷபீக்கின் அகால மரணமும்.... காரைதீவு- மாளிகைக்காடு இனக் கலவரமும், தொடர்ச்சியான ஹர்த்தால்களும், பொருட் தட்டுப்பாடுகளும், இயக்கங்களால் முஸ்லிம் இளைஞர்களின் தகவல்கள்  வெளியீடுகள், என்பன திரட்டப்பட்டதும், இதனால், ஆசிரியர் குழுவே திக்கொருவராய் சிதறியதும்.,  எஞ்சியோர்  மீண்டும்  ஒன்று கூடியதும் தனித்தனி பயங்கர அனுபவங்களே...  எனினும் ஏப்ரல் மாதம் தூதைக் கொணர்ந்தோம்..

௦௦



தூது... முகநூல் தொடர்..(6)

 6வது தூது- 1985 ஜனவரி

➖➖➖➖➖➖➖➖➖


    இவ்விதழின் ஆசிரிய தலையங்கத்தில் அக்கால பொதுக் கவியரங்குகளில் கவிஞர்கள் ஒருவரையொருவர் வசைபாடும் கீழ்த்தர இயல்புக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில்,  சித்தி ஜெரீனா கரீம், மஷூரா ஏ மஜீத் Sithy Mashoora Suhurudeen - நி. இராஜம் புஷ்பவனம்-  எச்.ஏ. அசீஸ் Aliyarl Azeez - சம்மாந்துறை ஆயிஷா ரஷீத்- மாத்தரைச் செல்வி ஸமினா சஹீத்- திக்குவல்லை சப்வான் Dickwella Safwan - நற்பிட்டிமுனை பளீல்- கடோத்கஜன்- தம்பிலுவில் ஜெகா- நூறுல் ஹக்- எஸ்.எம்.எம். றாபிக்-  முதலியோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன...


போக்குவரத்தின் போது திடீரென ஆட்கடத்தல் நிகழும் ஒரு பயங்கர சூழலில், மட்டு.கத்தோலிக்க அச்சகத்திலிருந்து  தூதை எடுத்து வர நாங்கள் பயந்து கொண்டிருந்த போது , புகவம் உறுப்பினர், நண்பர் சாய்ந்தமருது பாரூக், தான் நாளைக்கு  காத்தான்குடிக்கு போவதாகவும் அப்படியே மட்டக்களப்புக்குச் சென்று தூது இதழ்களை கொண்டு வர முடியும் என்று உறுதியளித்து அடுத்த நாள்  போகும் வழியில், தாளங்குடாவுக்கு அண்மையில் வைத்து இனம்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்ட தகவலில் உறைந்து ஒடுங்கிப் போனோம்.... 


அதன் பின் ஒரு மாதத்தின் பின்னரே தூது  வந்தது...

௦௦



தூது... முகநூல் தொடர்..(4&5)

 4 வது 5வது தூது (1984-  மே-ஓகஸ்ட்)- ஆண்டுமலர்.

➗➗➗➗➗➗➗


அன்பளிப்பு ரூ. 4/-


    இவ்வாண்டு மலர் 3௦ பக்கங்களுடன்.. புதிய உதயத்தின் புதுமைக் குரல்கள் என்று கட்டியம் கூறி, தூது என்பதை ‘’போட்டோபுலக்’’ செய்து பொத்துவில் அல்-ஹலீஜ் அரபுக்கலாசாலை விளம்பர அனுசரணையுடன் வெளிவந்துள்ளது..


இதற்குத் தேவையான நிதியை வழங்கியவரும், மேயர் சிராஜ் மீராசாஹிப் அவர்களின் தந்தையாரான மர்ஹூம் ஏ.மீராசாஹிப் JPஅவர்களே..


இவ்விதழில், கொக்கூர்கிழான்- செ.குணரத்தினம்- அ. கௌரிதாசன்-பாலையூற்று அஷ்ரபா- Ashrafa Noordeen  ஞானக்கண்ணன்- கமருன் நிஷா ரிஷாத்- கல்முனை ஆதம்- பாலமுனை பாறுக் பாவேந்தல்- சித்தி ஜெரீனா கரீம்-  Ibnu Asumath இப்னு அசூமத் - முருகு- தீரன்- நிலா தமிழின்தாசன்- மேமன்கவி Memon Kavi - கே.நாகராஜா-  எச்.ஏ. அஸீஸ் Aliyarl Azeez - திக்வல்லை ஸப்வான்- Dickwella Safwan  மஸீதா ஹம்ஸா- மருதூரான்- அன்பிதயன் சிறாஜ்- நி. இராஜம் புஷ்பவனம்-நற்பிட்டிமுனை பளீல்- மஷூரா ஏ மஜீத்- Sithy Mashoora Suhurudeen  ஏ.எம்.எம். நசீர்- அறநிலா- தம்பிலுவில் கலைலங்கா- எம்.ஆர்.சுமன்- நஸீறா அன்சார்- மருதூர்க்கவி- இக்பால்கான்- மருதூர் ஜமால்தீன் மருதூர் ஜமால்தீன்-  பாரிஹா- எம்.எம்.எம். நகீபு-  தர்ஹாநகர் ஷாரா- ஏ ஜி.ஏ ஜாபிர்  ஆகியோர் எழுதியிருந்தனர்.  


காதோரம் பகுதி  மரபு- புதுக் கவிதைகளின் பயன்பாடு பற்றிப் பேசியது. முக்கியமாக  இதுவரை வெளியான தூது இதழ்கள்—சின்னப் பார்வைக்குள்.... என்ற ஒரு விமர்சனத் தொகுப்பை மேமன்கவி விமர்சித்திருந்தார்.  இதுவரை மொத்தமாக பிரசுரிக்கப்பட்ட 41 கவிதைகளில் 5 மட்டுமே கவிதை என்று குறிப்பிட்டிருந்தார் அவர். 


பார்வை பகுதியில் -  தர்காநகர் ஸபாவின் ‘சந்தம்’- நூறுல்ஹக்கின் ‘சோலை’- க.தணிகாசலத்தின் ‘தாயகம்’- மஷூறா.ஏ மஜீதின் ‘நிறைமதி’- இம்மானுவேல் புஷ்பராஜனின் ‘காற்று’-  க.ஐ. யோகராசாவின்  ‘இந்துமதி’- சந்தியோ அமிர்தராஜாவின் ‘இதயசங்கமம்’- ஆகிய சஞ்சிகைகளின் அறிமுகம் உள்ளது 

பாலம் என்ற பக்கத்தில் தமிழக முன்னோடிப் புதுக்கவிதையாளரின் சில கவிதைகள் வந்துள்ளன..


    தராசு என்ற நூல் விமர்சனம் பகுதியில்  கலைவாதிகலீலின் -கருவறை யிலிருந்து கல்லறைக்கு- விமர்சனத்தை ஞானக்கண்ணன் எழுதியிருந்தார். மற்றும் இவ்விதழில் 83 ஆடிக்கலவரத்தில்  உயிரிழந்தோருக்கும் கவிஞர். ஈழவாணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


மடல் விடு தூது என்ற தலைப்பில் வாசகரின் கண்டனக்கடிதங்கள் சிலவும் பிரசுரிக்கப்பட்டுள்ளன... 

௦௦



தூது.... முகநூல் தொடர்..(3)

 3வது தூது- (1984 பெப்ரவரி)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

    இவ்விதழின் ஆசிரியத் தலையங்கத்தில், விமர்சனம் என்ற பேரில்  பிரதியொன்றை ஏசிக் கிழிப்போர் பற்றி ஒரு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது...  


இவ்விதழில், சுலைமா ஏ.ஷமி- மருதூர் அப்டுல் ஹசன்,- ஜிப்ரியா ஷெரீப்,- பாண்டியூர் நாகா- பாவலர் பஸீல்காரியப்பர்- கல்முனை ஆதம்- நஸீரா லாபீர்- தம்பிலுவில் ஜெகா-  எம்.ஏ. ரஹிமா- கட்டுகொட மஷீதா ஹம்சா- பாத்திமா மைந்தன் - நற்பிட்டிமுனை பளீல்-  முருகு- Ashrafa Noordeen அஷ்ரபா நூர்டீன் ஆகியோரின் கவிதைகள் வந்திருந்தன.


காதோரம் பகுதியில் 1980 இல் தினபதி நடத்திய கையெழுத்துப் பத்திரிகைப் போட்டியின் முடிவுகள் வெளியிடப்படாமை பற்றி விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அடுத்த தூது இதழ் ஆண்டு மலராக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 3 வது வெளியீட்டை அச்சகத்திலிருந்து எடுத்து வரும்போது சுற்றிவளைப்பில் அகப்பட்டு ‘’தமிழீழப் பிரசுரம்’’ என்று கல்முனை பொலிசில் மாட்டி ஒரு புண்ணியவானின், உதவியால் விடுவிக்கப்பட்டதும், புகவம் உறுப்பினர்களின் வீடுகளில் எழுந்த பயங்கர எதிர்ப்புகளும், தடைவிதிப்புகளும்  ஒரு தனிக்கதை......

(கல்முனை மாநகரசபை முன்னாள் மேயர் சிராஜ் மீராசாஹிப் அவர்களின் தந்தையாரான மர்ஹூம் ஏ.மீராசாஹிப் JPஅவர்களே அந்தப் புண்ணியவான்)

௦௦



தூது..முகநூல் தொடர் (2)


2வது தூது- (1983- நவம்பர்)    

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

     

    இலங்கையில் போர் மேகம் பரவலாகச் சூழ்ந்த இக்காலப்பகுதியில், இரணடாவது தூது இதழ் மிகச் சிறியளவில் வந்தது.. இதன் ஆசிரிய தலையங்கம்  புதுக் கவிதை எழுதுவோருக்கு ‘’நக்கல்’’ அடிக்கும், அப்போதைய மரபுப் ‘பெரிசு’களின் நடத்தையைக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது.. 


இதில்- மெஹ்ருன் நிஷா ரிசாத்- ரஞ்சினி சரவணமுத்து- குறைஷா முகைடீன்- நிலாதமிழின் தாசன்- ஏ.எம்.எம். நஸீர்- அ.கௌரிதாசன்- றாபீக்- கல்முனை கலீல்- இப்னுஅஷூமத்- சிறிதேவகாந்தன்- சித்தி ஜெரினா கரீம்- ஆகியோர் எழுதியிருந்தனர்.


இவர்களில், நிலாதமிழின்தாசன் எழுதிய ‘மாற்றம் தேவை’ என்ற கவிதை பலதரப்பினரின் கூர் அவதானம் பெற்றது குறிப்பிடத்தக்கது,,


அப்பா/ தம்பியை ஏன் தண்டித்தீர்கள்/ சுண்டுவிரல் தூக்கினான் என்பதற்காகவா/ என்னையும் முன்னர் இப்படித்தான் தண்டித்தீர்கள்/ அதனால்தான் இன்று/ எங்கள் வீட்டுக்/கோழிக்குஞ்சுகளை/ கதறக் கதறத் தூக்கிச் சென்று/ கொடிய பருந்துகள் கொத்தும்போது/ கண்ணீர் மல்கிக் கை பிசைந்து நிற்கிறேன்/ தம்பியை விடுங்கள்/ கொடிய பருந்துகளை வீழ்த்த/ அவன் இப்போதே/ குறிவைத்துப் பழகட்டும்.....

 

காதோரம் பகுதி இடம்பெறவில்லை. கல்முனை புகவம் நடத்தும் புதுக்கவிதைப் போட்டிக்கு தயாராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

௦௦



அழகா

Saturday, February 27, 2021

தூது 1--16

தூது - 1


தூது - 2


தூது - 3

தூது - 4&5


தூது - 6


தூது - 7


தூது - 8

தூது - 9


தூது - 10


தூது - 11&12


தூது - 13



தூது - 14



தூது - 15


தூது - 16







 

Tuesday, February 9, 2021

தூது.....முகநூல் தொடர் (1)

 1வது தூது- (1983 ஓகஸ்ட்)

‘இலக்கியத் தூதே இலட்சியத் தூது’ என்ற மகுட வாசகத்துடன் 6 பக்கங்களுடன் கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல் சேர், பாவலர் பசில் காரியப்பர் சேர் ஆகியோரின் மறைமுக ஆதரவுடன் வெளியானது முதலாவது தூது. அன்பளிப்பு ரூ;1/-.
இதில் ஜமீல் சேர் அவர்களின் சிந்தனையில் உருவான இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கம் கூறியது...
இவ்விதழில், கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா ஷரீப்- பூபால் கதிரவேல்- மஷூறா.ஏ மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்- ரஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..
எம்.ஆர். சுமனின், காதோரம் என்னும் இலக்கியத் தகவல் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் ‘மாருதம்’- அல் அஷூமத்தின் ‘பூபாளம்’- என்.பி. கனகலிங்கத்தின் ‘சந்திப்பு’- கணமகேஸ்வரனின் ‘தாரகை’- குமரன் சஞ்சிகையின் 65 வது இதழ் ஆகிய சஞ்சிகைகளின் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆசிரியர்; ஆர்.எம். நௌஷாத்
இணை ஆசிரியர்கள்; கல்முனை ஆதம், எஸ்.எம்.எம். றாபிக்
கல்முனை பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தில் நண்பர் கல்முனை முபாரக்கின் ‘அல்-ஜஸீரா’ அச்சுச் சாதனங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.. வெளியிட்டாசிரியர்.; கல்முனை அபூ.
௦௦
No photo description available.
Thiagarajah Rajarajan, Ashroff Shihabdeen and 60 others
17 Comments
Like
Comment
Share

Comments

  • படித்துள்ளேன்!
    1
    • Like
    • Reply
    • 5d
  • நன்றி.நல்ல சேவை.
    1
    • Like
    • Reply
    • 5d
  • அருமையான தகவல்.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    1
    • Like
    • Reply
    • 5d
  • அன்று பேசப்பட்ட சிற்றிதழ் 'பூபாளம்' இதழில் எனது ஆக்கங்கள்
    வெளிவந்த காலகட்டம்; மீள் வரவு நல் வரவாகட்டும்; வாழ்த்துகள்.
    1
    • Like
    • Reply
    • 5d
    • Edited
  • அடடா
    நானும் நானும்
    என் பக்கத்தை பிரதி ஒன்ற அனுப்புக
    வாழ்த்துகள்
    1
    • Like
    • Reply
    • 5d
  • மருதமுனை நூலகத்தில் ஒரு கவிதையையும் விடாமல் வாசித்திருக்கிறேன். அது எனது எழுதும் காலம் அல்ல. வாசிக்கும் காலம். சொற்களைச் சாப்பிட்டு மகிழும் காலம்.
    1
    • Like
    • Reply
    • 5d
  • அளவான
    அருமையான
    அழகான… 
    See More
    1
    • Like
    • Reply
    • 5d
  • மிகுந்த மகிழ்ச்சி.பழையன மீட்டல்.சுமன் நம்மோடு இல்லை.கண மகேஸ்வரன் எங்கிருக்கிறாரோ?கடந்த காலத்தை மீளத்தருகிறீர்கள்.நன்றி
    1
    • Like
    • Reply
    • 5d
  • என்னிடமும் பிரதி உண்டு!
    1
    • Like
    • Reply
    • 5d
  • அரிய தகவல்தான்
    • Like
    • Reply
    • 5d
  • முதலில் ரோணியோ இதழாகத் தூது கிடைத்தது; என் சிறு வயதில் அதன் தலக்கோலம் மீது எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்தது; இன்னுமொன்று நமது பிரதேச மட்டத்தில் புதுமையான சஞ்சிகை சுவர்; "நீங்களும் சுவரில் எழுதலாம்" என்ற வாசகம் நமக்கு இன்னும் ஒரு ஆகிருத்திதான் மச… 
    See More
    2
    • Like
    • Reply
    • 5d
    • Edited
  • தூது சிறு பேப்பராக நீளப்படடில் நான்காக மடித்து வெளிவந்ததைக் கண்டு அதிர்ந்திருக்கிறேன் மச்சான்; அன்றைய நாடகளில் "தூது நெளஷாத்" என்றுதான் உன்னை அழைப்பது; நீ அந்நேரம் சரியான கேப்பர் காரன்..😂
    3
    • Haha
    • Reply
    • 5d
    • Edited
  • இதனை நான் ஒரு முறை எனது பதிவில் போட்டிருந்தேன். நீங்கள் அதற்கு பின்னூட்டமிட்டு இருந்தீர்கள். காலம் உள்ளவரை தூதும் வாழும். இவைகள் வரலாற்று சாதனைகள். பாராட்டுக்கள். தூது என்ற பெயரை நீங்கள் தெரிவு செய்வதற்கான காரணம் என்ன.??
    1
    • Love
    • Reply
    • 5d
    • Edited
  • Very nicr
    1
    • Like
    • Reply
    • 5d
  • " தூது வரும் எனச்சாற்று" எனும் கோஷமே இளைஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்த்து இலக்கிய தாகமும் தீர்த்த காலங்கள் பசுமையானவை தீரன்
    2
    • Like
    • Reply
    • 5d
    • Like
    • Reply
    • 4d