தூது அறிமுக விழா அழைப்பிதழ்
Monday, March 28, 2022
Sunday, April 25, 2021
திக்குவல்லை கமால்
Dickwella Kamal
இலக்கியத் தகவல் :
சாயந்தமருது விலிருந்து 1980 நடுப் பகுதியில் ' தூது ' என்றொரு கவிதை இதழ் வெளிவந்துள்ளது. 06 ம் 14 ம் இதழ்கள் இவை.பக்கங்கள் குறைவாயினும் ஒரு நிறைவு தெரிகிறது.ஆசிரியர் , தீரன்- ஆர் .எம்.நௌஷாத் மேலதிக தகவல்களைப் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
Wednesday, April 21, 2021
Tuesday, March 2, 2021
தூது..முகநூல் தொடர்..(1)
1வது தூது- (1983 ஓகஸ்ட்)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
‘இலக்கியத் தூதே இலட்சியத் தூது’ என்ற மகுட வாசகத்துடன் 6 பக்கங்களுடன் கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல் சேர், பாவலர் பசில் காரியப்பர் சேர் ஆகியோரின் மறைமுக ஆதரவுடன் வெளியானது முதலாவது தூது. அன்பளிப்பு ரூ;1/-.
இதில் ஜமீல் சேர் அவர்களின் சிந்தனையில் உருவான இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கம் கூறியது...
இவ்விதழில், கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா ஷரீப்- பூபால் கதிரவேல்- மஷூறா.ஏ மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்- ரஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..
எம்.ஆர். சுமனின், காதோரம் என்னும் இலக்கியத் தகவல் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் ‘மாருதம்’- அல் அஷூமத்தின் ‘பூபாளம்’- என்.பி. கனகலிங்கத்தின் ‘சந்திப்பு’- கணமகேஸ்வரனின் ‘தாரகை’- குமரன் சஞ்சிகையின் 65 வது இதழ் ஆகிய சஞ்சிகைகளின் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆசிரியர்; ஆர்.எம். நௌஷாத்
இணை ஆசிரியர்கள்; கல்முனை ஆதம், எஸ்.எம்.எம். றாபிக்
கல்முனை பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தில் நண்பர் கல்முனை முபாரக்கின் ‘அல்-ஜஸீரா’ அச்சுச் சாதனங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.. வெளியிட்டாசிரியர்.; கல்முனை அபூ.
௦௦
தூது...முகநூல் தொடர்..(16)
16வது தூது -(1989- ஏப்ரல்)
➖➖➖➖➖➖➖➖➖
இவ்விதழ் ஒரு புதுமையான அமைப்பில் வெளியாகியுள்ளது, பரிமாற்றம் என்னும் ஆசிரியத் தலையங்கம் ஆங்கிலக் கவிதையாக எழுதப்பட்டுள்ளது...
முகம்மது ரஸ்புடீன்- ஏ.எம்.எம். நஸீர்- எம்.ஐ. பௌஸ்தீன்- எம்.ஐ.எம். சுபைர்- Gazzaly Ashshums கஸ்ஸாலி அஸ்- ஷம்ஸ்- எம்.வை. நஜீப்கான்- எச்.ஏ. அஸீஸ்- Sithy Mashoora Suhurudeen மஷூரா ஏ. மஜீத்- மூதூர் சாக்கின்-, வாழைச்சேனை அமர்- ஆகியோர் மொத்தம் 11 கவிதைகளை எழுதியிருந்தனர்..
இவ்விதழில், எம்.ஐ.எம் சுபைர் எழுதிய..
/.....இது என்ன மிருகங்களின் ராஜ்யமா...
தேசியக் கொடியிலும் வாளேந்திய சிங்கம்.../
என்ற கவிதையால் ஒரு சிறு விவாதம் மூண்டு தணிந்தது...
இலங்கையின் முதுபெரும் அரசியல்வாதியும் கல்முனைத் தொகுதியின் முதல் பா.உ. மற்றும் அமைச்சர் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மறைவுக்கு பிரார்த்தித்துள்ளது..
இது அக்கரைப்பற்று ஆர்ஜே. அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது..
முக்கியமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இவ்விதழில், எச் ஏ,. அஸீஸ் ஆங்கிலத்தில் எழுதிய MY REVERENT GURU என்ற கவிதையும், எம்.வை. நஜீப்கான் எழுதிய ‘’ பூமியை இயற்றிய பூமலங்கு’’ என்ற கவிதையும், அக்கவிதைகளின் கீழ் இடப்பட்ட, ‘’பூமலங்கு சாஹிபு ஒலியுல்லாஹ்வின் வெளிப்படுகை’’ (24.03.1989) என்ற வசனமும் கடும் சர்ச்சைகளுக்குள்ளாகின.
கல்முனை புகவம் வெளியீட்டுக் குழுவுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. குழுவும் மூன்று துண்டுகளாக உடைந்தது...
இதனால், தூது இந்த 16 வது இதழுடன் பரிதாபமாகத் தன் மூச்சை இழந்தது...
இதன் பிறகு தூது வரவில்லை.0
தூது...முகநூல் தொடர்..(15)
15வது தூது (1988- ஒக்டோபர்)
➖➖➖➖➖➖➖➖➖
வாசகர் எவரும் இதுவரைக்கும் எவ்விதமான பணமனுப்பாததால் இவ்விதழ் முற்றிலும் இலவச வெளியீடாக வந்துள்ளது. இக்காலத்தில் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்குமிடையில் உச்சக்கட்ட மோதல் இருந்தது. இலங்கையில் வாரக்கணக்கில் மின்சாரம் இல்லாத ஒரு காலம் இது...எனவே மிகவும் தாமதமாகவே இவ்விதழ் வந்துள்ளது...
வட-கிழக்கில் நாள் தோறும் குண்டு
விழுமுயிர்க்கு ஒரு கணக்கா உண்டு..?
விடுதலைப் புலி சுடும் வேட்டை
விழுங்கிவிடும் நாட்டை
வெளியேறும் அமைதிப்படை என்று..?
என்று ஆசிரியத் தலையங்கம் ஆரம்பிக்கிறது.
இந்த இதழில்- வீ. ஆனந்தன் - பாவேந்தல் பாலமுனை பாறூக் பாவேந்தல் - ஓட்டமாவடி அஷ்ரப் Ashroff Shihabdeen – ஏ.எம்.எம். நஸீர் -தீரன்- கவி இம்தா உவைஸ்- கலைச்சிற்பி- ஆகியோரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
இதில் ஓட்டமாவடி அஷ்ரப் (அஷ்ரப் சிஹாப்தீன்) எழுதிய, "என்னைப்பற்றிய கவிதை.. " என்ற கவிதையில் வரும் ,
/...........
நடப்பதை எழுதலாம் என்றால்...
சிலவேளை
நான் பின்வருமாறு ஆக்கப்படலாம்..
அரச விரோதியாக.. அல்லது அட்ரஸ் இல்லாமல்..../ என்ற வரிகள், ஒரு மட்டத்தில் ஒரு கட்டத்தில் சர்ச்சைக்குள்ளானது...
கவிஞர். ஏ. இக்பால், 23.OCT.1987 தினகரனில், ‘’... வாசகரின் ஆதரவின்மையால் தமிழ்நாட்டில் நடை என்ற எட்டை நிறுத்தி விட்டனர். அவ்வாறு தூதும் நின்று விடாது, வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்....’’ என்றெழுதிய குறிப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது...
மற்றும் கல்முனை புகவம் நடத்திய ‘புதுச்சுவர்’ சஞ்சிகை விமர்சன விழாவில் எம்.ஏ.நுஹ்மான்- சண்முகம் சிவலிங்கம்- பாஸில்- கல்லூரன்- றாபிக் ஆகியோரின் உரைகள் நிகழ்த்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.. ன.
இது கல்முனை பைன் ஆர்ட். அச்சகத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
௦௦
தூது...முகநூல் தொடர்..(14)
14வது தூது. (1988 மார்ச்)
➖➖➖➖➖➖➖➖➖
புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு பூர்த்தியையும் முன்னிட்டு சற்றுப் பெரியளவில் வந்த இவ்விதழ் ‘’சமாதான ஒப்பந்தத்தின் பின் சாம்பலாகிப் போன நபிகளின் உம்மத்துகளுக்காக’’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
, இதன் ஆசிரியத் தலையங்கம்
வெடிகுண்டு குடிகொண்டு குடிமனைகள் வெடியுண்டு
வெடிவெடித்து மடியுயிர்கள் கோடியுண்டு- இனியும்
வெடிகுண்டு வெடிக்காமல் மடியுயிர்கள் மரிக்காமல்
குடிகொள்ளும் படி செய்தல் சிறப்பு
என்று தொடங்கி- தமிழ்ப்படை-சிங்களப்படை-இந்தியப்படை- என்று இலங்கை முழுவதும் படை மயமாக இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு படையுமில்லை.. பட்டாளமுமில்லை.. எல்லாப்பக்கத்தாலும் பாதிப்படைந்ததால் நமக்கும் ஒரு பாதிப். படையாவது உருவாக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டுள்ளது..
மொத்தம் வெளியான 21 கவிதைகளையும் ,
ஜெமீலா ஹனூன் மீராசாஹிப்- ஏ.எச். ஜவ்பர் காரியப்பர்- எம். முகமட் நகீபு- ஏ.எம்.எம். நஸீர் –மதுரம் பியாஸ்- எம்.ஏ. மாறன்- நிதானிதாசன்- எம்.வை. நஜீப்- எச்.ஏ. அஸீஸ் Aliyarl Azeez –தீரன்- அல்-அசூமத்- கஸ்ஸாலி அஸ் ஷம்ஸ்- Gazzaly Ashshums ஏஎல் கபூர் – முசம்மிலா மீராசாஹிப்- சாய்ந்தமருது தஸ்மான்- மதிமகன் ஜாபீர்- எஸ்.எம்.எம். ராபீக்- ஆகியோர் எழுதியிருந்தனர்.
எச்.ஏ. அஸீஸின் ‘A FORCED PREGNANCY’ என்ற ஆங்கிலக் கவிதை இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.. இது, பின்நாளில் பரவலாக மறுபிரசுரங்கள் செய்யப்பட்டு பிரபலமானது..
புகவம் எட்டாண்டு நிறைவையும் தூது ஐந்தாண்டு பூர்த்தியையும் முன்னிட்டு குறும்பா போட்டி ஒன்றுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.. .
இவ்விதழில் NOTICE BOARD எனும் பகுதியில், பாலமுனை பாறுக்கின் ‘பதம்’ - தர்ஹாநகர் ஸுலைமா ஏ சமியின் ‘’வைகறைப் பூக்கள்’’- ஆசுகவி அன்புடீனின் ‘முகங்கள்’- ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தூது வெளிஈட்டாசிரியர் எம்.ஐ.மன்ஸூர் அவர்களின் திருமணத்தை ஒட்டி அவருக்கு ஒரு வதுவை வாழ்த்தும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஹைக்கூ கவிதைப்பக்கமும், மடல்விடுதூது ஆகிய குறிப்புகளும் வந்துள்ளன..
இவ்விதழுக்கு காணிக்கை ரூ..5௦௦/- என்று ஒரு குறும்பாகப் போடப்பட்டுள்ளது.. ரூ.5/-ஆவது அனுப்புவார்கள் என காதோரம் பகுதியில் நம்பிக்கை தெரிவிக்கப்படுவதுடன், அக்காலப் பகுதியில் வெளிவந்தவற்றுள் கிடைக்கப்பெற்ற சில நூல்களின் தகவல்களும் உள்ளன..
கோகிலா மகேந்திரனின், துயிலும் ஒரு நாள் கலையும்—பிரசவங்கள்- மௌலவி ஏ,எல். முபாரக்கின், ‘இறைபாதை’- மௌலவி ஆதம்பாவாவின், ‘இஸ்லாமும் கவிதையும்’, மல்லிகைப் பந்தல் வெளியீடுகளான, அட்டைப்பட ஓவியங்கள், ஆகுதி-, என்னில் விழும் நான்,- மல்லிகைக் கவிதைகள், இரவின் ராகங்கள்,, மற்றும் வகவம் வெளியிட்ட ‘’வகவம்’’ சஞ்சிகை பற்றிய குறிப்புகளும் உள்ளன..
இன்னும், முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில், முஸ்லிம் எழுத்தாளரின் சிறந்த நூல்களுக்கு பரிசளித்த நிகழ்வில்,
கலைவாதி கலீல், பி.எம். புன்னியாமீன், அல்-அசூமத், ஈழமேகம் பக்கீர்தம்பி-, அன்புமுகையதீன், அ.ச.அப்துஸ் சமது, ஜுனைதா ஷெரீப், நாகூர் கனி- முக்தார் ஏ. முகம்மது-, நாளிர்-, முபாரக்-, ஆகியோர் பரிசில்களும் விருதுகளும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
இது சாய்நதமருது நஷனல் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
௦௦

.jpeg)
.jpeg)
.jpeg)




