மே.. 1
காலம் கண்ணாடியில்
தன் முகம் பார்க்கிறது
வயதுப் பறவை ஒன்று
ஒரு இறகு உதிர விட்டு
வானில் பறக்கிறது..
புறாக்கள் வந்து
புதுக்கவிதை சொல்கிறது
புற்தரை கூட உனக்காகப்
புதுச்சட்டை அணிகிறது
வானவில் வந்து
வானத்தில் வர்ணம் அடிக்கிறது.
பட்டு மேகம் ஒன்று கூடி
உனக்காக
பரிசு கொண்டு வருகிறது
என்னிடம்
என்ன இருக்கிறது
உனக்குத் தர?
இந்தக் கவிதையும்
இந்த இதயமும் தவிர....
O
தீரன்
பூவனம் செய்பவள்
பூக்கள் பூக்கும் முன்பே
புன்னகையால்
ஒரு பூவனம் செய்தவள் நீ!
கண்கள் விழிக்கும் முன்பே
விழிகளுக்குள் ஒரு
கனவை விதைத்தவள் நீ
மனசுக்குள் மறைந்து கொண்டு- ஒரு
மந்திரம் செய்தவளும் நீ.
ஆயிரம் சந்திரனை
அள்ளிப் பூசிக்கொண்டு
அதிசயம் செய்பவள் நீ
வாட்டும் தாகம் தணிக்க
வந்து விடு அன்பே.
O
தீரன்
புன்னகையால் ஒரு புதுக்கவிதை
ஒவ்வொரு நாளும்
புன்னகையால் ஒரு
புதுக்கவிதை எழுதுகிறாய்
கண்ணசைவில்
ஒரு கடிதம் வரைகிறாய்
இமைகளில்
இறகு பூட்டி
இதயத்தை அசைக்கிறாய்
விழிகளில்
மது நிரப்பி
மனசில் ஊற்றி விடுகிறாய்
கண்ணுக்குள்
கடலைக் கட்டி வைத்து
கல்புக்குள் அலை பாய்ச்சுகிறாய்
மஞ்சள் வெயிலை பூசிக் கொண்டு
மஞ்சந்தொடுவாயில் நின்று
மனம் பறிக்கின்றாய்
சந்.. திரனுடன்
சமரசம் செய்து கொண்டு
ஏன் தீரனோடு மட்டும்
போர் செய்கிறாய்
அன்பே...
O
தீரன்
விளையாடும் My தானம் நீ
உன் பளிங்குத் தோள்களில்
வழுக்கி விழுகின்றேன்
இறுக்கிப் பிடித்து
என்னை விழுங்கி விடு
உன் பரந்த முதுகில்
படகு விடுகிறேன்
என் துடுப்பை பிடித்து
துழாவி விடு
உன் கண்களுக்குள்
நட்சத்திரம் எறிகிறேன்
பொறுக்கி
இமைகளுக்குள் வைத்து
இறுக்கி மூடிக்கொள்
பொறு,
இதழ்களைக் கொத்த வருகிறேன்.
O
தீரன்
No comments:
Post a Comment