Friday, October 14, 2022
Monday, March 28, 2022
Sunday, April 25, 2021
திக்குவல்லை கமால்
Dickwella Kamal
இலக்கியத் தகவல் :
சாயந்தமருது விலிருந்து 1980 நடுப் பகுதியில் ' தூது ' என்றொரு கவிதை இதழ் வெளிவந்துள்ளது. 06 ம் 14 ம் இதழ்கள் இவை.பக்கங்கள் குறைவாயினும் ஒரு நிறைவு தெரிகிறது.ஆசிரியர் , தீரன்- ஆர் .எம்.நௌஷாத் மேலதிக தகவல்களைப் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
Wednesday, April 21, 2021
Tuesday, March 2, 2021
தூது..முகநூல் தொடர்..(1)
1வது தூது- (1983 ஓகஸ்ட்)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
‘இலக்கியத் தூதே இலட்சியத் தூது’ என்ற மகுட வாசகத்துடன் 6 பக்கங்களுடன் கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல் சேர், பாவலர் பசில் காரியப்பர் சேர் ஆகியோரின் மறைமுக ஆதரவுடன் வெளியானது முதலாவது தூது. அன்பளிப்பு ரூ;1/-.
இதில் ஜமீல் சேர் அவர்களின் சிந்தனையில் உருவான இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கம் கூறியது...
இவ்விதழில், கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா ஷரீப்- பூபால் கதிரவேல்- மஷூறா.ஏ மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்- ரஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..
எம்.ஆர். சுமனின், காதோரம் என்னும் இலக்கியத் தகவல் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் ‘மாருதம்’- அல் அஷூமத்தின் ‘பூபாளம்’- என்.பி. கனகலிங்கத்தின் ‘சந்திப்பு’- கணமகேஸ்வரனின் ‘தாரகை’- குமரன் சஞ்சிகையின் 65 வது இதழ் ஆகிய சஞ்சிகைகளின் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆசிரியர்; ஆர்.எம். நௌஷாத்
இணை ஆசிரியர்கள்; கல்முனை ஆதம், எஸ்.எம்.எம். றாபிக்
கல்முனை பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தில் நண்பர் கல்முனை முபாரக்கின் ‘அல்-ஜஸீரா’ அச்சுச் சாதனங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.. வெளியிட்டாசிரியர்.; கல்முனை அபூ.
௦௦
தூது...முகநூல் தொடர்..(16)
16வது தூது -(1989- ஏப்ரல்)
➖➖➖➖➖➖➖➖➖
இவ்விதழ் ஒரு புதுமையான அமைப்பில் வெளியாகியுள்ளது, பரிமாற்றம் என்னும் ஆசிரியத் தலையங்கம் ஆங்கிலக் கவிதையாக எழுதப்பட்டுள்ளது...
முகம்மது ரஸ்புடீன்- ஏ.எம்.எம். நஸீர்- எம்.ஐ. பௌஸ்தீன்- எம்.ஐ.எம். சுபைர்- Gazzaly Ashshums கஸ்ஸாலி அஸ்- ஷம்ஸ்- எம்.வை. நஜீப்கான்- எச்.ஏ. அஸீஸ்- Sithy Mashoora Suhurudeen மஷூரா ஏ. மஜீத்- மூதூர் சாக்கின்-, வாழைச்சேனை அமர்- ஆகியோர் மொத்தம் 11 கவிதைகளை எழுதியிருந்தனர்..
இவ்விதழில், எம்.ஐ.எம் சுபைர் எழுதிய..
/.....இது என்ன மிருகங்களின் ராஜ்யமா...
தேசியக் கொடியிலும் வாளேந்திய சிங்கம்.../
என்ற கவிதையால் ஒரு சிறு விவாதம் மூண்டு தணிந்தது...
இலங்கையின் முதுபெரும் அரசியல்வாதியும் கல்முனைத் தொகுதியின் முதல் பா.உ. மற்றும் அமைச்சர் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மறைவுக்கு பிரார்த்தித்துள்ளது..
இது அக்கரைப்பற்று ஆர்ஜே. அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது..
முக்கியமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இவ்விதழில், எச் ஏ,. அஸீஸ் ஆங்கிலத்தில் எழுதிய MY REVERENT GURU என்ற கவிதையும், எம்.வை. நஜீப்கான் எழுதிய ‘’ பூமியை இயற்றிய பூமலங்கு’’ என்ற கவிதையும், அக்கவிதைகளின் கீழ் இடப்பட்ட, ‘’பூமலங்கு சாஹிபு ஒலியுல்லாஹ்வின் வெளிப்படுகை’’ (24.03.1989) என்ற வசனமும் கடும் சர்ச்சைகளுக்குள்ளாகின.
கல்முனை புகவம் வெளியீட்டுக் குழுவுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. குழுவும் மூன்று துண்டுகளாக உடைந்தது...
இதனால், தூது இந்த 16 வது இதழுடன் பரிதாபமாகத் தன் மூச்சை இழந்தது...
இதன் பிறகு தூது வரவில்லை.0
தூது...முகநூல் தொடர்..(15)
15வது தூது (1988- ஒக்டோபர்)
➖➖➖➖➖➖➖➖➖
வாசகர் எவரும் இதுவரைக்கும் எவ்விதமான பணமனுப்பாததால் இவ்விதழ் முற்றிலும் இலவச வெளியீடாக வந்துள்ளது. இக்காலத்தில் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்குமிடையில் உச்சக்கட்ட மோதல் இருந்தது. இலங்கையில் வாரக்கணக்கில் மின்சாரம் இல்லாத ஒரு காலம் இது...எனவே மிகவும் தாமதமாகவே இவ்விதழ் வந்துள்ளது...
வட-கிழக்கில் நாள் தோறும் குண்டு
விழுமுயிர்க்கு ஒரு கணக்கா உண்டு..?
விடுதலைப் புலி சுடும் வேட்டை
விழுங்கிவிடும் நாட்டை
வெளியேறும் அமைதிப்படை என்று..?
என்று ஆசிரியத் தலையங்கம் ஆரம்பிக்கிறது.
இந்த இதழில்- வீ. ஆனந்தன் - பாவேந்தல் பாலமுனை பாறூக் பாவேந்தல் - ஓட்டமாவடி அஷ்ரப் Ashroff Shihabdeen – ஏ.எம்.எம். நஸீர் -தீரன்- கவி இம்தா உவைஸ்- கலைச்சிற்பி- ஆகியோரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
இதில் ஓட்டமாவடி அஷ்ரப் (அஷ்ரப் சிஹாப்தீன்) எழுதிய, "என்னைப்பற்றிய கவிதை.. " என்ற கவிதையில் வரும் ,
/...........
நடப்பதை எழுதலாம் என்றால்...
சிலவேளை
நான் பின்வருமாறு ஆக்கப்படலாம்..
அரச விரோதியாக.. அல்லது அட்ரஸ் இல்லாமல்..../ என்ற வரிகள், ஒரு மட்டத்தில் ஒரு கட்டத்தில் சர்ச்சைக்குள்ளானது...
கவிஞர். ஏ. இக்பால், 23.OCT.1987 தினகரனில், ‘’... வாசகரின் ஆதரவின்மையால் தமிழ்நாட்டில் நடை என்ற எட்டை நிறுத்தி விட்டனர். அவ்வாறு தூதும் நின்று விடாது, வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்....’’ என்றெழுதிய குறிப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது...
மற்றும் கல்முனை புகவம் நடத்திய ‘புதுச்சுவர்’ சஞ்சிகை விமர்சன விழாவில் எம்.ஏ.நுஹ்மான்- சண்முகம் சிவலிங்கம்- பாஸில்- கல்லூரன்- றாபிக் ஆகியோரின் உரைகள் நிகழ்த்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.. ன.
இது கல்முனை பைன் ஆர்ட். அச்சகத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
௦௦


.jpeg)
.jpeg)
.jpeg)



