Monday, July 8, 2024

DHARUL HIKAM-3

 

Dharul hikam- 3

 

 எழுந்திரு -4


அண்ணார்ந்து பார்க்கிறேன்
ஆகாயமெல்லாம்
உன் பெயர்தான்

மல்லார்ந்து படுக்கிறேன்
மலர் எல்லாம்
உன் முகம்தான்

எழுந்திரு,
எல்லா நாட்களும்
எனக்கு
மே 1 தான்...
O
தீரன்

 

கண்ணுறங்கு -1

இமைகளைத் திறந்து
கனவுக்குள் வருகிறேன்

வந்தவுடன்
விழிகளை மூடி
என்னைச் சிறை வைக்கிறாய்

விடியும் வரை
விடுதலை இல்லையோ...
O
தீரன்..

 


கண்ணுறங்கு -2

கனவு மொழிகளால்
உனக்கொரு
கவிதை எழுதுகிறேன்..
கண்ணுறங்கு

கண்களுக்குள்
கன்னிவெடி வைத்த
கள்ளி நீ..

புன்னகைக்குள்
பூகம்பம் செய்த
புள்ளி நீ..

துப்பாக்கிப் பார்வையால்
சுடாதே..

கண்களை மூடு..
O
தீரன்..

 

கவிதை ஆகிறேன்

நீ வாசிக்கும் போது
உன் கண்களாவேன்..
நீ சுவாசிக்கும் போது
தென்றல் ஆவேன்
நீ தூங்கும் போது
கனவுகள் ஆவேன்
நீ எழுதும் போது
கவிதை ஆவேன்

0

தீரன்..

 

விலகிச் செல்லும் வெண்ணிலவு

பூமியை சுற்றி வந்தது
பூமிக்கு அழகு தந்தது
பூமியால் கவிதை பெற்றது
பூமிக்கு வெளிச்சம் தந்தது

நிலவுக்கு என்ன நேர்ந்ததோ
நிலவுக்கு கிரகணம் பிடித்ததோ
மேதினிக்கு ஒளி தரவில்லை
மேகத்துள் புதைந்து கொண்டதோ...

ஒளி குறைந்த காரணமேனோ..
ஒளிந்து கொள்ளும் நேரமுமிதோ

தேய்கிற காலம் வந்ததோ
தேய்பிறையாக மனம் வந்ததோ
ஓய்கிற நோக்கம் கொண்டதோ
ஒருபோதில் அமாவாசை ஆகிடுமோ....

பொல்லா நிலவநீ
போய் விடுவாயோ...இந்தப்
பூமியை விட்டு..?
நில்லா நிலவே..நீ
நின்றுவிடுவாயோ வராமல்..?

பால்நிலவே...உன்
நினைப்பால் நிலவே..இந்தப்
பூமி சுழல்வதை நிறுத்தி..தன்
புவியீர்ப்பை இழந்திடுமோ...

சந்திரன் இல்லாப் பூமி
சாகத் துணிந்திடும் சாமி...0
00
 
தீரன்...1988 

 

வீடியோக் கண்ணி

அழகு முகத்திலிரு   மின்மினிப்  பூச்சி
அனுமதியின்றி எப்படிப்     போச்சி ?
அடிக்கடி துடிக்கிறதே
அபாரமாய் நடிக்கிறதே
அட..இந்நாளில் இதே    நினைவாய் ஆச்சி

விழிவீசினாயே விஞ்ஞானக்     கண்ணி
வெடிவைத்தழித்தாயுன்          கண்ணில்
விழியீர்ப்பு விசையில் நான்
விழுந்தேன் மின் வலையில்
வழியின்றி அழிந்தேன் இம்    மண்ணில் 

0

தீரன்

 

தூது

கடல் கோபித்திருக்கிறது
என்னிடம்
கவிதை ஒன்று கேட்டு...

கரைக்கு வந்து
அலைக்கரங்களால்
என் கால் பிடித்துக்
கதறுகிறது..

நுரைப்பல் காட்டிச்
சிரித்துக் கெஞ்சுகிறது

புதைத்து வைத்திருந்த
சூரிய, சந்திரனைக்
காட்டி  ஆசையூட்டி
அடம் பிடிக்கிறது..

ஒரு
கவிதை எழுதிக்
கொடுக்கலாம்தான்

அவளிடம்
தூது போகச்
சம்மதித்தால்...

0

தீரன்

 

நான் உன் நூல்

என்னை வாசித்துவிட்டு
இடையில்,
எதற்காக
மூடி வைத்தாய்..

இந்த நூலகத்தில்
நீ
வசிக்க வராவிடடாலும்
வாசிக்கவாவது வாயேன்

உன் விழிகள் விரவிய
உன் விரல்கள் நிரவிய,
என் பக்கங்கள்
இன்னொரு கரத்தால்
புரட்டப்பட முன்னே...,

அட்டை கிழிந்து
அறைக்குள்
எறியப்பட முன்னே...

விட்ட
இடத்திலிருந்து
என்னை
விரைவாக
வாசித்து முடித்துவிடு
என் அன்பே..
0
தீரன்..2021 


பரிசுப் பொதி

 

அள்ளி வந்தேன்

ஆகாயத்தில் இருந்து

 

பஞ்சு மேகம் கொஞ்சம்

பால் நிலாவில் ஒரு துண்டு

கை நிறைய நட்சத்திரங்கள்

 

எல்லாம் உனக்கே ஏற்றுக் கொள்

அவற்றுக்குப் பதிலாக

 

உன் புன்னகை ஒன்றை

அனுப்பி வை 

0

தீரன்..

 

பறிகொடுத்தலின் பரிதவிப்பு


என்னுடைய பூ
எவருடைய தோட்டத்திலோ
பூத்திருக்கிறது

என் பாடலை
வேறொருவர் பாடுகிறார்

என் புல்லாங்குழலை
ஊதுவது எவரது வாய்?

என் கனவைக் காண்பது
இன்னொருவரின் கண்கள்

நான் எழுதிய கவிதைக்கு
யாரோ உரிமை கொள்கிறார்கள்

கையறுந்த நிலையில்
கண்ணீரை ஊற்றுகிறேன்
வேறென்ன செய்வேன்?
O

 

தீரன்

 

ஊடல்


என்னில் கோபமில்லை

என்று கூறிவிட்டுக்
கோபித்திரு.....

என்னுடன்
பேசமாட்டேன்
என்று பேசிவிட்டுப்
பேசாதிரேன்..

இனி என்னைப்
பார்க்க மாட்டேன்
என்று சொல்லு
என்னைப் பார்த்து.

எனக்கு ஒன்றும்
எழுதப் போவதேயில்லை
என்று எழுதேன்..

என் கைகளைத்
தொடவே மாட்டேன்
என்று
என் கையில் அடித்து
சத்தியம் செய் பார்க்கலாம்
O

 

தீரன்.

 

நீ

சந்திரனில் பூத்த
சாமந்திப்பூ நீ

அந்தியில் மலர்ந்த
அந்திமந்தாரை நீ

0

தீரன்

வான ஓவியம் நீ.


வானத்தில் உன்னை
வரைந்து வைத்தேன்

வானவில் வந்து
உன்னை உடுத்திக் கொண்டது

எங்கே என்னவள்
என்று கேட்டேன்..

காணவில்லை
வானவில்லை..
O
தீரன்  

போடா லூசு -1

ஆடி வந்து என்
மஞ்சம் தொடுவாய்
பாடி வந்து என்
பஞ்சம் தீர்ப்பாய்..
நாடி வந்து என்
நெஞ்சம் தொடுவாய்
ஓடி வந்து என்
குஞ்சம் தொடுவாய் 
O
தீரன்  

 

N கவிதைகள்-3


N ன இது புதுமை...
N கவிதைகள் எல்லாமே
N ஐப் பற்றியே  எழுதப்பட்டு
N இலேயே வாழ்கின்றன..

N னென்று  சொல்ல..
N னவளின் பாடல்களில்
N ஜீவன் உயிர் பெறுகிறது
O
தீரன்.. 

 

N கவிதைகள்-2

 

என்ன மொழியில் எழுத 

உன் பெயரை 

என்ன மொழியில் எழுத..?

 

சொன்ன போதில் இனிக்கும் 

அந்தப் பெயரைத் 

தாளில் எழுதித் 

தரையில் வைக்க - அதைத்

தின்ன எறும்புகள் வருகிறதே..

 

மின்னல் மொழியில் எழுதி

அதை 

வானத்தில் வைத்த போதில் 

வாசித்துப் பார்க்க வருகிறதே 

இந்தச் சின்ன மேகம்..

 

இன்ன மொழியில் என்றில்லாது

என்ன மொழியிலும் எழுதித் 

தின்னதின்ன இனிக்கிறதே 

உன் பெயர்...

 

N ன பெயர் அது 

N ன மொழி அது?

தீரன் 

 

N கவிதைகள்-1


N
ன இப்படிக் கத்துகிறது
இந்தக் கடல்..
N
னிடம் கெஞ்சுகிறது
ஒரு கவிதை கேட்டு..

N
ன கவிதை சொல்ல இதற்கு..
N
இல் இருந்த
உன் பெயர் சொன்னேன்

ஆஹா,
N
னே இனிது இந்தக் கவிதை
N
று சொல்லி
அமைதி அடைந்தது கடல்...
O
தீரன்..

 

மலர்கள்

 

மஞ்சந்தொடுவாயின்

மலர்களைப் போலவே

என்

நெஞ்சமெல்லாம்

பூத்துக் கிடக்கின்றாய் நீ..

o

தீரன்

 

Monday, May 20, 2024

DHARUL HIKAM 2

 

சந்திர வதனம்.

உனது முகம்
எனது வானத்தில் சந்திரன்.

உனது குரல்
எனது சபையில்
குழலிசை...

உனது உருவம்
எனது மார்பில்
சந்தனமாலை.

உனது பெயர்
எனது தேசத்தின்
தேசிய கீதம்..
00
தீரன்..

 

புண்ணாக்கு

புண்ணாக்கு என்று சொல்லி
என் மனதைப்
புண்ணாக்குதல் முறையோ..

புண்ணாக்கு என்று
உன்நாக்கு சொல்லுதல் சரியோ

என்நாக்கு  அதற்குப்
பதில் ஒன்று சொல்லுது கேட்பாயோ..

உன்னைப் பெண்ணாக்கு
முதலில், பின்னர்
என்னை உன் கண்ணாக்கு.
மஞ்சத்தில் படுத்து
உன்னை என் முன்னாக்கு.

அப்புறம் பார்
என்னாக்கு உன்னாக்குடன்
உரசி உரசித் தின்னாக்கு என்பேன்
நீதான் புண்ணாக்கு ஆவாய்
நான்தான் மாடு..

மேய்ந்து மேய்ந்து
இரவு முழுவதும்
பண்னாக்குவோம்..
விடியலைப் பின்னாக்குவோம்..
O
தீரன்

 

M-orning
A-ngele
Y-ou
1-

நட்சத்திரம் பதித்த
நீல வானப் போர்வையைப்
போர்த்தி,
சந்திரத் தலையணை இட்டு
உன்னைத்
தூங்க வைக்கிறேன் வா..

நதிகளில் உன் பெயரை
புல்லாங்குழலினால் எழுதி
இசைக்கிறேன் கேள்..

அந்தி வெயிலுக்குப் பிறந்த
மந்திரப் பெண்ணே
உன்னைச்
தென்றலை வீசி
சிறைப் பிடிக்கின்றேன் பார்.

வர்ணங்களால்
ஒரு வாழ்த்து எழுதி அதை
வானவில்லில் அனுப்புகிறேன்
வாசி.

வாழ்க நீ வளமாக
என்று என்னுடன் இணைந்து
வனக் குயில்களும்
வாழ்த்துகின்றன கேள்.

எழுதித் தீரா ஆசைகளுடனும்
மனம் நிறையக் காதலுடனும்
தீரன் அனுப்புகிற 'தூது'
இது.
0

தீரன்..

 

 

பறிகொடுத்தலின் பரிதவிப்பு

என்னுடைய பூ
எவருடைய தோட்டத்திலோ
பூத்திருக்கிறது

என் பாடலை
வேறொருவர் பாடுகிறார்

என் புல்லாங்குழலை
ஊதுவது எவரது வாய்?

என் கனவைக் காண்பது
இன்னொருவரின் கண்கள்

நான் எழுதிய கவிதைக்கு
யாரோ உரிமை கொள்கிறார்கள்

கையறுந்த நிலையில்
கண்ணீரை ஊற்றுகிறேன்
வேறென்ன செய்வேன்?
O

தீரன்



 பூ வகை

 

சந்திரனில் பூத்த
சாமந்திப்பூ நீ

அந்தியில் மலர்ந்த
அந்திமந்தாரை நீ

0

தீரன்

 

ஊடல்


என்னில் கோபமில்லை

என்று கூறிவிட்டுக்
கோபித்திரு.....

என்னுடன்
பேசமாட்டேன்
என்று பேசிவிட்டுப்
பேசாதிரேன்..

இனி என்னைப்
பார்க்க மாட்டேன்
என்று சொல்லு
என்னைப் பார்த்து.

எனக்கு ஒன்றும்
எழுதப் போவதேயில்லை
என்று எழுதேன்..

என் கைகளைத்
தொடவே மாட்டேன்
என்று
என் கையில் அடித்து
சத்தியம் செய் பார்க்கலாம்
O

தீரன்

 


நான் உன் நூல்

என்னை வாசித்துவிட்டு
இடையில்,
எதற்காக
மூடி வைத்தாய்..

இந்த நூலகத்தில்
நீ
வசிக்க வராவிடடாலும்
வாசிக்கவாவது வாயேன்

உன் விழிகள் விரவிய
உன் விரல்கள் நிரவிய,
என் பக்கங்கள்
இன்னொரு கரத்தால்
புரட்டப்பட முன்னே...,

அட்டை கிழிந்து
அறைக்குள்
எறியப்பட முன்னே...

விட்ட
இடத்திலிருந்து
என்னை
விரைவாக
வாசித்து முடித்துவிடு
என் அன்பே..
0
தீரன்..

 

கனவு மொழி

கனவு மொழியால்
உனக்கொரு
கவிதை எழுத,

இமைகளைத் திறந்து
உன்
கனவுக்குள் வருகிறேன்

உன் கருவிழி ஊற்றி
வெண் விழியில்
எழுதுகிறேன்..

கண்ணீரால்
அழித்து விடாதே..

விழி மூடி
வாசித்துப் பார்.

விடிந்ததும்
முடிந்து விடும்
இந்தக் கனவுமொழி..

O
தீரன்..