Thursday, July 23, 2015

1984.ன் தூது ஆண்டு மலர்.- கே.எஸ். சிவகுமாரன்.


1984.ன் தூது ஆண்டு மலர்.-  
கே.எஸ். சிவகுமாரன்.




புதிய உதயத்தின் புதுமைக்குரல்கள்  என்ற பிரகடனத்துடன் 1984ம் ஆண்டு  மே-ஓகஸ்ட் மாதங்களுக்குரியதாக  கல்முனை புதுமை கலைஇலக்கியவட்டம்  தூது ஆண்டு மலரை வெளியிட்டது.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே  நவீன கவிதை  தமிழில் செழிப்புற ஈழத்து இளைஞர்களும் தமிழகத்து  கவிஞர்களும் வீறு கொண்டு  எழுந்தமை வரலாறு. இந்தக் கவிஞர்களிற் பலர் இன்னும் கவித்துவம் வாய்ந்த கவிதைகளைத் தந்து கொண்டிருக்கின்றனர்.  இந்த ஏட்டின் ஆசிரியராக விளங்;கியவர்  ஆர்எம். நௌஸாத். நிர்வாக ஆசிரியர் எஸ்.எம்.எம். ராபீக்.  முகவரி 503. புpரதான வீதிää சாய்ந்தமருது.01  வெளியிட்டவர் கல்முனை அபு.  கவிதை தொடர்பான இந்தச் சிற்றேடு  தொடர்ந்து வருவதாய்த் தெரியவில்லை.


இந்த ஆண்டு மலரிலே 35 கவிஞர்களின் ஆக்கங்கள் இடம்பெற்றன.  அவர்களில் பலர் இன்று  நாடறிந்த எழுத்தாளர்களாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர்.  உதாரணமாக சில பெயர்களை மட்டுமே தருகின்றேன்.

செ. குணரெத்தினம்ää அ.கௌரிதாசன்ää பாலமுனை பாறுக்.ää இப்னு அசுமத்ää தீரன்.ää நிலாதமிழின்தாசன்ää மேமன்கவிää திக்வல்லை சப்வான்ää நற்பிட்டிமுனை பளீல்ää மருதூர்க்கவிää  போன்ற பலர்  இதில் எழுதியிருக்கின்றனர்.   தமிழகத்தைச் சேர்ந்த  மறைந்த நகுலன்ää  மறைந்த பசுவையா (சுந்தரராமசாமி)ää புவியரசு ஆகியோரின்  மேற்கோள்களும் இடம்பெற்றுள்ளன..

புதுக்கவிதையாளர் என்று அறிமுகமாகி  இன்று எல்லோராலும் கௌரவிக்கப்படும்  ஒரு சிறந்த இலக்கியவாதியாகத் திகழும்  மேமன்கவி எழுதியுள்ள  திறனாய்வு குறிப்பிடத்தக்கது.   இந்தக் கட்டுரையில்  ஈழத்து விமர்சன வளர்ச்சி  விமர்சன வழிகாட்டிகள்  என்ற உப தலைப்பில்  இடம்பெற்ற பந்திகள்  மேமன்கவி அன்றே  தூரநோக்குச் சிந்தனையாளராக  வளர்ந்து வந்திருக்கிறார் என்பதைக் காட்டும்.

ஒரு பதிவுக்காக அவருடைய பார்வையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.

 ||……………. ஈழத்து விமர்சனத்துறை வளர்ச்சிபற்றிய கருத்தை  தூது வெளியிட்ட பொழுதுதான்  தூது இன்னும் விரிவாக  இத்துறைபற்றி அறிந்து எழுதியிருக்கலாம் என்று  தோன்றுகிறது..  ஏனெனில் ஈழத்து விமர்சனத்துறை  தமிழகத்தின் இலக்கிய விமர்சனத்தின்  சிலபோக்குகளுக்கு  முன்னோடியாகத் திகழ்கிறது  என்பதை தூது  குழுவினர் அறிந்து வைப்பது நல்லது.

மற்றும் பேராசிரியர் கைலாசபதிää கேஎஸ் சிவகுமாரன் கலாநிதி சிவத்தம்பிää எம்.ஏநூமான்ää  சன்முகம் சிவலிங்கம்ää வீ.ஆனந்தன்ää சித்ரலேகா மௌனகுருää கலாநிதி சண்முகதாஸ்ää சபாnஐயராசாää சிவசேகரம்   இப்படியாக நீண்ட பட்டியல் இங்கே கொடுக்கலாம்.  ஆனால் இடவசதி மனம் கொண்டு அதைத் தவிர்க்கிறேன்.  இலங்கையைப் போன்றோரின் உரைகளையும் நூல்களையும்ää  மல்லிகைääஅலைää சமர் போன்ற சஞ்சிகையிலும் தினகரன்ää வீரகேசரி போன்ற  பத்திரிகைகளிலும்  எழுதிய கட்டுரைகளை  கேட்டும் கற்றறிந்தும்  இருந்திருந்தால்  ஈழத்து விமர்சனத்துறை  வளரவில்வை என்ற கருத்துக்கு தூது குழு வந்திருக்காது.

மேற்கண்ட மேமன்கவியின் கருத்தோட்டத்துடன்  கலைவாதிகலீலின்  கருவறையிலிருந்து கல்லறைக்கு  என்ற கவிதைநூல் தொடர்பான விமர்சனக்  குறிப்பை ஞானக்கண்ணன்  நியாயபுர்வமாகத் தந்திருக்கிறார்.

புhமரப்பா என காலத்தால் அழியாத கிராமியக் கவித் தூதுகள்  என்ற தலைப்பில்  முகம்மது அலிக்கான்  ஓசை நயம்கொண்ட  சில கிராமியப்பாடல்களை  தந்திருக்கிறார்.

தூது தொடர்பாக  வாசகர் எழுதிய  கண்டனங்களையும் தூது பிரசுரிப்பது  அதன் நேர்மையைக் காட்டுகிறது..

தினகரன் வாரமஞ்சரி- 2014.ஐ_லை.27 ஞாயிறு.